• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு வீடு தேடி வந்த பொருட்கள்.. உண்மை தெரிஞ்சி கதறி துடித்த கண்ணன்!

கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு வீடு தேடி வந்த பொருட்கள்.. உண்மை தெரிஞ்சி கதறி துடித்த கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

அண்ணன்கள் எதோ ஒரு விதத்தில் நமக்கு உதவி செய்கிறார்கள் என எண்ணி கதறி அழுகிறான்.

  • Share this:
    ஐஸ்வர்யாவை வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செஞ்சிட்டு கஷ்டப்படும் கண்ணனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மாறி மாறி உதவும் காட்சிகள் காண்போரையும் கலங்க வைத்துள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வெற்றிக்கு காரணம் இந்த பாசம் போரட்ட கதைத்தான் என்று கூறலாம். 4 அண்ணன் - தம்பிகளின் பாசமும், குடும்பத்தை கட்டுகோப்பாக வைத்திருக்கும் மருமகள்களின் சாமர்த்தியமும் தான் உயிரோட்டமான கதையை தந்து ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளது. தொடர்ந்து ஹிட் சீரியலாக டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    வீட்டை விட்டு வெளியே போன கண்ணனுக்கு மொத்த குடும்பத்தினரும் மாறி மாறி உதவுகின்றனர். முதலில் முல்லை அவரின் அப்பா வழியாக உதவி செய்தார், அதன் பின்பு ஜீவா கண்ணனின் நண்பனுக்கு பணம் கொடுத்து அதை கண்ணனிடம் யாருக்கும் தெரியாமல் கொடுக்க சொன்னார், மீனா ஒருப்படி மேலே போய் அவரின் அப்பா வழியாக கண்ணனுக்கு வீடும் கொடுத்து வேலையும் வாங்கி தருகிறார். இந்நிலையில் கண்ணன் கையில் இருக்கும் பணத்தை வைத்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடிவெடுக்கிறார். அதன்படி ஐஸ்வர்யாவும் கண்ணனும் போய் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். அப்போது தான் மூர்த்தியும் தனமும் அவர்களை பார்க்கின்றனர்.



    இருவரும் இருக்குற நிலைமையைப் பார்த்து மனசு கேட்காத தனம், மூர்த்திக்கு தெரியாம ஜீவா-கதிர் கிட்ட, ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை பொருட்களை கண்ணனுக்கு தர சொல்கிறார். அதன்படி கண்ணன் ஐஸ்வர்யா இருக்கும் வீட்டுக்கு மளிகை பொருட்கள் போய் சேர்கிறது.வாசலில் மளிகைப் பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் ஆர்வத்துடன் திறந்து பார்க்கின்றனர். யார் பொருட்களை வைத்திருப்பார்கள் என யோசிக்கையில் கையெழுத்தை வைத்து கண்ணன் கண்டுப்பிடிக்கிறான். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருந்து தான் அனைத்தும் வந்திருக்கிறது. நம்ம அண்ணன்கள் எதோ ஒரு விதத்தில் நமக்கு உதவி செய்கிறார்கள் என எண்ணி கதறி அழுகிறான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவனை ஐஸ்வர்யா தேற்றுகிறாள். மொத்தத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கண்ணன் மீது கோபம் இருந்தாலும் பாசம் எந்த விதத்திலும் குறையவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: