• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீண்ட நாள் கோரிக்கை... ரசிகர்களுக்காக மீண்டும் பழைய சீரியலை ஒளிப்பரப்பும் விஜய் டிவி!

நீண்ட நாள் கோரிக்கை... ரசிகர்களுக்காக மீண்டும் பழைய சீரியலை ஒளிப்பரப்பும் விஜய் டிவி!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வரும் ப்ரஜின் பத்மநாபன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தார்.

  • Share this:
    சின்னத்தம்பி சீரியலை மீண்டும் ஒளிபரப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தமிழ் சின்னத்திரையில் பல வெற்றிகரமான சீரியல்களை கொடுப்பதில் ஸ்டார் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது. அழுகை, வில்லத்தனம், சோகம் என்று குடும்ப மயமாக ஒரே ட்ராக்கில் சென்று கொண்டிருந்த தமிழ் சீரியல்களை பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, காதல் என கலர்ஃபுல்லாக காட்டி இள வயதினரையும் சீரியல் பக்கம் திருப்பிய பெருமை விஜய் டிவி-க்கு இருக்கிறது.

    காலத்திற்கேற்றவாறு சின்னத்திரை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து புதிது புதிதாக சீரியல்களை களமிறக்குவது விஜய் டிவி-யின் வாடிக்கை. எனவே தான் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் இருந்து வருகின்றன. விஜய் டிவி-யில் தற்போது ராஜபார்வை, பாவம் கணேசன், வேலைக்காரன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், காற்றுக்கென்ன வேலி, மெளனராகம், தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜ ராணி 2 உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக சீரியல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 2019-ம் ஆண்டு ஜூன் 21 வரை ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல் சின்னத்தம்பி. சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வரும் ப்ரஜின் பத்மநாபன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தார்.

    தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தமிழகத்தின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றுள்ள போட்டியாளரான பாவனி ரெட்டி ஹீரோயினாக நடித்தார். தனது திறமை மூலம் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் ப்ரஜின் மற்றும் அழகு மற்றும் திறமையான நடிப்பு மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்த பாவனி ரெட்டி ஆகியோரின் காம்பினேஷன் மூலம் சின்னத்தம்பி சீரியல் ஹிட்டடித்தது.

    ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியலுக்கு விஜய் அவார்ட்ஸில் விருதுகளும் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் ரசிகர்ககைன் வரவேற்பை பெற்ற சின்னத்தம்பி சீரியலை மீண்டும் ஒளிபரப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் விஜய் டிவி-யில் மறுஒளிபரப்பு செய்யாமல், திரைப்படங்களை ஒளிபரப்பி வரும் விஜய் சூப்பர் சேனலில் சின்னத்தம்பி சீரியலை மீண்டும் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் எப்போது முதல் எந்த நேரத்தில் சின்னத்தம்பி சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: