அவ்வளவு வயசுலா ஆகல... இருந்தாலும் இவங்க தமிழோட அம்மாவா நடிக்க காரணம் இருக்கு!

தமிழும் சரஸ்வதியும் சீரியல்

சென்னையில் செட்டில் ஆன மீரா சினிமாவுக்கு தடை போட்டு, குடும்பத்தை கவனித்து வந்தார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடிக்கும் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணனின் பயணம் 3 வயதில் தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா?

  சின்னத்திரை சீரியல்களில் யங்க் அண்ட் பியூட்டி அம்மாவாக வலம் வரும், நடிகை மீரா கிருஷ்ணன் வயது 36 தான். இருந்தாலும் தனது வயது உள்ள நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். 3 வயதில் இவரின் பயணம் தொடங்கியது. கேரளாவில் பிறந்து வளர்ந்த மீரா முறைப்படி கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொண்டார். அதன் பிறகு
  ‘கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் சேண்டல்வுட்டில் பிரபலமடைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பினால் ‘மார்கம்’ படம் மூலமாக கேரள சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானார்.

  அந்த படத்திற்கு பிறகு மீராவை தேடி ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்தன, இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்த பட வாய்ப்புகளை தவிர்த்தார். படிப்பை நிறைவு செய்த பின்பு சினிமாவை தனது கெரியராக தேர்ந்தெடுத்தவர் பல்வேறு படங்கள், சீரியல்களில் நடித்தார். தனது திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆன மீரா சினிமாவுக்கு தடை போட்டு, குடும்பத்தை கவனித்து வந்தார். இவருக்கு அழகான 2 மகன்கள் உள்ளனர். இவரின் கணவரும் சினிமா நடன ஆசியர் தான். இதனால் மீண்டும் மீராவுக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது.

  கலைஞர் டிவியில் பொக்கிஷம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் முதன்முறையாக நுழைந்தார். அதன்பிறகு சன்டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவில் கவர்ந்தார். ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Meera Krishna💫 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meerakrishnaofficial)


  இவரின் கதாபாத்திரம் அம்மா கேரக்டரில் சரியாக பொருந்தியதால் அடுத்தடுத்து இவருக்கு சீரியலில் அம்மா ரோல் கிடைக்க தொடங்கியது. அடுத்தாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்தார். அப்போது தான் சித்தி 2 சீரியலில் நெகட்டிவ் ரோல் இவருக்கு வழங்கப்பட்டது. அதிலும் பாசக்கார அம்மா தான் ஆனாலும் நெகட்டி ஷேட். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக புரிந்து கொண்டு சித்தி 2 சீரியலில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

  இந்த நேரத்தில் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவி தீபக் நடிக்கும் தமிழும் சரவஸ்வதியும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இதில் கோதை கதாபாத்திரத்தில் அம்மாவாக நடிக்கிறார். இதிலும் இவரின் நடிப்புக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. அம்மா ரோலை செண்டிமெண்ட்டாக நினைத்து மீரா கிருஷ்ணன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவது தான் அவரின் சக்சஸ். அதனாலே தொடர்ந்து அம்மா ரோலுக்கு நோ சொல்லாமல் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க வேண்டுமென்றால் டபுள் ஓகே தானாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: