• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோதை அம்மாவுக்கு ஏத்த மருமகள்.. டாப் கியரில் செல்லும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்!

கோதை அம்மாவுக்கு ஏத்த மருமகள்.. டாப் கியரில் செல்லும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

சரஸ்வதி தான் இந்த திட்டத்தை நடக்கவிடாமல் செய்தவர். அது எப்படி நடந்தது? என்பதையும் அவரே சொல்கிறார்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

    விஜய் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நெடுந்தொடராக பயணித்து வருகிறது.கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான தென்றல் சீரியலை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள். இதில் தமிழாக நடித்த நடிகர் தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் கம்பேக் கொடுத்துள்ளார். விஜய் டிவி தீபக்கை நம்பி தமிழும் சரவஸ்தியும் சீரியலை கொடுத்தது. கொடுத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளதீபக் சீரியலில் தமிழாக கலக்கி வருகிறார்.

    அதிகம் படிக்காத தமிழ், நன்றாக படித்த பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் விதி அவருக்கு சரஸ்வதியை அறிமுகப்படுத்துகிறது. சரஸ்வதி 12 வது பாஸ் செய்யவே 10 முறை அட்டம்ட் எழுதுபவர். தடைகளை வென்று இவர்கள் இருவரும் இணைவதே சீரியலின் கதை. இருவரும் காதலிப்பது உறுதியானது. எந்த கோயிலில் வைத்து தமிழ், சரஸ்வதியை சந்தித்தாரோ அதே கோவிலில் தனது காதலை சொன்னார் தமிழ். சரஸ்வதியும் ஓகே சொல்லிவிட்டார்.

    இப்படி காதல் ரசத்தில் சென்றுக் கொண்டிருந்த சீரியலில் தற்போது கார்த்திக் - வசுவின் கல்யாணம் எபிசோடுகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோதை அம்மா கல்யாணத்தில் இருக்க கூடாது என வில்லி செய்த அனைத்து தகிடுதத்தங்களும் வீணாய் போனது. கோதை அம்மாவுக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயக்க அடைந்து விட்டால், வசு கல்யாணத்தை அவரின் ஆசீர்வாதம் இல்லாமல் முடிக்க பிளான் செய்தார் வில்லி. ஆனால் தமிழியின் காதலியான சரஸ்வதி இதை முறியடித்து விட்டார்.



    சரஸ்வதி தான் இந்த திட்டத்தை நடக்கவிடாமல் செய்தவர். அது எப்படி நடந்தது? என்பதையும் அவர் வாயிலே சொல்கிறார். இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. கோதை அம்மாவுக்கு ஏற்ற மருமகளாக சரஸ்வதி நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நல்ல ரேட்டிங்கில் இடம் பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: