இந்த தமிழ் புத்தாண்டில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வழங்குகிறது கலர்ஸ் தமிழ்
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் வரவிருக்கும் நிலையில், மக்களை மகிழ்விக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சிறப்பான பல நிகழ்ச்சிகளின் பிரத்யேக தொகுப்பை இதற்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 14 – ம் தேதி, வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு தினத்தன்று காலை 6.00 மணிக்கு “தி வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ்” என்ற பாரம்பரிய நிகழ்ச்சியோடு கலர்ஸ் தமிழ் தனது சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை தொடங்குகிறது.
“சுபகிருத்து தமிழ் வருடப் பலன்கள்” என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பலன்களை வழங்கும் அரைமணி நேர நிகழ்ச்சியை கரூர் வைஸ்யா வங்கியை சிறப்பு பார்ட்னராகக் கொண்டு கலர்ஸ் தமிழ் வழங்குகிறது. காலை 8:30 மணிக்கு ஒரு புத்தம் புதிய ஜோதிட நிகழ்ச்சியில் இச்சேனல், ஜோதிசாச்சார்ய ஜோதிஷசாம்ராட் என அறியப்படும் பிரபல ஜோதிட வல்லுனர் டாக்டர். மகேஷ் ஐயர் அவர்களை கலர் தமிழ் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் செய்கிறது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!
அதைத்தொடர்ந்து மார்கெட் ஆஃப் இந்தியா மற்றும் கார்டியா அட்வான்ஸ்டு கடலை எண்ணெய் ஆகியவற்றோடு சிறப்பு பார்ட்னர்களாக விஜயலட்சுமி ஹோம் அப்ளையன்சஸ், பிளாக் தண்டர், ஊட்டி மெயின் ரோடு, மேட்டுப்பாளையம், மில்கா வொண்டர் கேக் மற்றும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகியவை இணைந்து வழங்கும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அவசியமாக இருப்பது அன்பா, அறிவா? என்பதுதான் இப்பட்டிமன்றத்தின் சிந்திக்கத்தூண்டும் தலைப்பாகும்.
புகழ்பெற்ற ஊடகவிலாளரும், முதுநிலை ஆசிரியர் மற்றும் நடிகர் திரு. ரங்கராஜ் பாண்டே நடுவராக பங்கேற்கும் இப்பட்டிமன்ற விவாதத்தில், காமெடியனும், பேச்சாளருமான பழனி, இயக்குனர் மற்றும் இன்ஃப்ளுயசஸ் ராஜ்மோகன், ஊக்கமளிக்கும் பேச்சாளர் சசி லயா, முனைவர் வேதநாயகி, கவிஞர் மலர்விழி மற்றும் பேச்சாளர் எழிலரசி ஆகிய பிரபலங்கள் தங்கள் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதற்காக பங்கேற்கின்றனர்.
அனல் பறக்கும் சுவாரஸ்யமான விவாதம் மட்டுமின்றி, அந்நாள் முழுவதிலும் மக்களை பரவசத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற நோக்கத்தோடு மாலை 6.30 மணிக்கு அம்மன் 3 நெடுந்தொடரும் மற்றும் இரவு 10:00 மணிக்கு சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரும் ஒளிபரப்பாகும். கொண்டாட்டங்களுக்கு இன்னும் சுவை சேர்க்கும் வகையில், போட்டிக்குப் போட்டி ஆர் யு ரெடி? என்ற நிகழ்வில் நடக்கப்போகும் குதூகலமூட்டும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் ஆர்வமூட்டும் போட்டிகளும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும்.
Axis Bank : இனிமேல் மினிமம் பேலன்ஸ் ரூ.12,000.. ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!
புத்தாண்டு சுபதினத்தை மனதை வருடும் இனிமையான இசையோடு தொடங்கி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நிறைவான உணர்வையும் வழங்குவதும் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் கேஜே. யேசுதாஸ் போன்ற இசை ஜாம்பவான்களைப் போற்றி கௌரவிப்பதும் தி வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற இசை விருந்தின் நோக்கமாகும். இசை, ஜோதிடம், சுவாரஸ்யமான நெடுந்தொடர் நிகழ்வுகள், பட்டிமன்றம், ஆகியவற்றோடு “மாறா மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற பிரபல திரைப்படங்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்னும் ஆனந்தமானதாக ஆக்கவிருக்கின்றன. வசந்த் & கோ சிறப்பு பார்ட்னராக இணைந்து வழங்கும் இத்திரைப்படங்கள் பார்வையாளர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் தொலைக்காட்சியோடு ஒன்றவைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏப்ரல் 14 – ம் தேதி, வியாழக்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உங்கள் குடும்பத்தோடு ஆனந்தமாக அனுபவிக்க காலை 6.00 மணி முதல் தொடங்கி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியோடு இணைந்திருங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Tamil New Year, TV Serial