Home /News /entertainment /

சின்னத்திரை பிரபலங்களின் இன்ஸ்டா பொங்கல்.. குவியும் லைக்ஸ்!

சின்னத்திரை பிரபலங்களின் இன்ஸ்டா பொங்கல்.. குவியும் லைக்ஸ்!

இன்ஸ்டாகிராம் பொங்கல்

இன்ஸ்டாகிராம் பொங்கல்

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிவிடுகின்றனர். அதற்கு லைக்ஸூம் குவிந்த வண்ணம் உள்ளது. யார் யார் அந்த பிரபலங்கள் வாங்க பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை என்றால் வீட்டில் பொங்கல் வைத்த பின்பு, குடும்பத்துடன் வெளியே செல்வோம். அல்லது அன்று தியேட்டரில் ரிலீஸாகும் புது படத்தை நண்பர்களுடன் சேர்ந்து போய் பார்ப்போம். இன்னும் சிலர் கிராமத்திற்கு சென்று தாத்தா, பாட்டி உறவுகளுடன் கிராமத்து பொங்கலை என்ஜாய் செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஸ்மார்ட் ஃபோன் வளர்ச்சியால் பாதி இளைஞர்களின் பொங்கல் கொண்டாட்டம் செல்ஃபோனிலே முடிந்துவிடுகிறது. காலையில் எழுந்த உடனே வாட்ஸப்பில் பொங்கல் ஸ்டேட்டஸ், வீடியோ காலில் விஷ், இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட 4 ஃபோட்டோ. இதை செய்வதற்கே பாதி நாள் ஓடி விடுகிறது.

  இன்ஸ்டா பொங்கல், ஃபேஸ்புக் பொங்கல் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெயர் வைத்து கொண்டு, அந்த ஹேஷ்டேக்கில் வீடியோக்களை,ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ட்ரெண்டாகி விடுகிறார்கள். இந்த ட்ரெண்டிங்கில் அனைத்து தரப்பினரின் புகைப்படங்களும் இடம் பெறுகின்றன. சீரியல் செலிபிரிட்டீஸ், யூடியூப் பிரபலங்கள், ரீல்ஸ் கலைஞர்கள், டிக் டாக் பிரபலங்கள் என லிஸ்டு ரொம்ப பெருசு. அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டா பொங்கல் தான் ட்ரெண்ட். பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை புகைப்படங்களாக எடுத்து அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகின்றனர்., அத்துடன் தங்களது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிவிடுகின்றனர். அதற்கு லைக்ஸூம் குவிந்த வண்ணம் உள்ளது. யார் யார் அந்த பிரபலங்கள் வாங்க பார்க்கலாம்.

  பிக் பாஸ் கவின்: 

  விஜய் டிவி சீரியல், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தன்னுடைய பொங்கல் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற கவின் இப்போது ஹீரோ வேற. இந்த வருடம் அவரின் நடிப்பில் பல படங்கள் திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.  இந்த பொங்கலுக்கு வேஷ்ட்டி சட்டையுடன் ரொம்ப சிம்பிளாக க்யூட்டாக போஸ் கொடுத்து இருக்கிறார் கவின்.   
  View this post on Instagram

   

  A post shared by Kavin M (@kavin.0431)
   

  சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா: 

  தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரியான ஸ்ரீநிஷா, பாவாடை தாவணியில் ஃபோட்டோ எடுத்து அதன் மூலம் தனது ரசிகர்க்ளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

  இதையும் படிங்க..குடும்பத்துடன் திருப்பதி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம்!
   

  விஜய் டிவி கேப்ரில்லா; 

  குழந்தை நட்சத்திரமான கேப்ரில்லா இப்போது சின்னத்திரை நாயகி. இவர் கண்டாங்கி சேலையுடன், கையில் பானையை பிடித்தப்படி போஸ் கொடுத்து பொங்கல் வாழ்த்துக்களை ஷேர் செய்துள்ளார்.

   
  View this post on Instagram

   

  A post shared by Gaby (@gabriellacharlton_)
   

  யாஷிகா ஆனந்த்: 

  கடந்த வருடம் யாஷிகாவுக்கு மோசமான வருடமாக அமைந்தது. இந்த புது வருடம் அவருக்கு பல நல்ல வாய்ப்புகளை தரும் என்ர நம்பிக்கையுடன் சிவப்பு  நிற பாவாடை தாவணியில் ஜொலித்தப்படி பொங்கல் போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார்.


  தர்ஷா குப்தா: 

  குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்ற தர்ஷா, தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Dharsha (@dharshagupta)


  சாக்‌ஷி;

  பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற சாக்‌ஷி, தனது ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.   
  View this post on Instagram

   

  A post shared by Kolly Glitz (@_kolly_glitz_)
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Pongal, TV Serial

  அடுத்த செய்தி