தமிழில் பிக்பாஸ் அடுத்த சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்?

தமிழில் பிக்பாஸ் அடுத்த சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்?

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் சீசன் 5-க்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வதாக நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அது நிகழ்ச்சிக்கான புரமோஷனாக மாறி விடுகிறது.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில் 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. 4 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது 5 -வது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியலில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். எனவே சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இந்தமுறை வழக்கம் போல ஜூன் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த நிகழ்ச்சிக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்ட பணிகளில் பிக்பாஸ் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: ஆஜித்தின் புதுமுயற்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து

4-வது சீசனில் அர்ச்சனா, பாலாஜி, ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, கேபி, ஆஜித், அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், ரியோ, நடிகை ரேகா, சுசித்ரா, ரம்யா பாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்தமுறை யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது அடுத்தடுத்து தெரிய வரும்.
Published by:Sheik Hanifah
First published: