Home /News /entertainment /

சரஸ்வதிக்கு குடும்பத்தால் வரும் புது பிரச்சனை.. செம்ம கோபத்தில் தமிழின் அம்மா கோதை!

சரஸ்வதிக்கு குடும்பத்தால் வரும் புது பிரச்சனை.. செம்ம கோபத்தில் தமிழின் அம்மா கோதை!

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி சபதத்தில் ஜெயிக்கிறாரா? இல்லையா?

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நல்லா போயிட்டு இருந்த சரஸ்வதி வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை. தமிழின் அம்மா கோதை, பயங்கர கோபத்தில் இருக்க காரணமே சரஸ்வதி பாட்டி தான். இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது? என பார்க்கலாம்.

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி சபதத்தில் ஜெயிக்கிறாரா? இல்லையா? என்பதை பார்க்க மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த வாரம் இதுத் தொடர்பான எபிசோடுகள் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. சரஸ்வதி தனது குடும்பத்தை மிஸ் செய்வதை புரிந்து கொண்ட தமிழ், சரஸ்வதியின் தம்பி மற்றும் தங்கையை கோயிலில் சந்திக்க வைக்கிறார். கூடவே சரஸ்வதியின் பாட்டியும் கோயிலுக்கு வந்து இருக்கிறார்.

    அஸ்வின் – லாஸ்லியாவுக்காக சிம்பு செய்த செயல்.. யூடியூப்பில் இப்ப இதுதான் வைரல்!

    மொத்த குடும்பத்தையும் பார்த்தசரஸ்வதி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த தமிழுக்கு அனைவரும் நன்றி சொல்கின்றனர். இதற்கு நடுவில், சந்திரகலா வழக்கம் போல் சதி வேலை செய்ய தொடங்குகிறார். சரஸ்வதியை பரீட்சையில் ஃபெயில் பண்ண, ஆசிரியருக்கு லஞ்சம் கொடுக்கிறார். இதற்கு தமிழின் அத்தையும் உடந்தை. சரஸ்வதியை எப்படியாவது ஃபெயில் பண்ணி, கார்த்திகிடம் அசிங்கப்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கிறனர். அதே போல் தமிழ் இனி எப்போதுமே ஜி.எம் பதவிக்கு வர கூடாது என்பதே அவர்களின் ஆசை. அடுத்து என்ன ஆகும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.

    என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

    இப்படி இருக்கையில், சரஸ்வதியை கோயிலில் பார்த்துவிட்டு ஆட்டோவில் சென்ற பாட்டி, வழியில் கோதை அம்மாவை பார்க்கிறார். தனது பேத்தி கஷ்டப்படுவதை நினைத்து அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் கோதை அம்மாவை திட்டி விடுகிறார். அதுமட்டுமில்லை, சரஸ்வதி - தமிழை கோயிலில் பார்த்து பேசியதையும் உளறிவிடுகிறார். கோதை அம்மா, இருவரையும் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்திருப்பது பற்றி பாட்டி கேட்க, அதற்கு கோதையும் கோபத்தில் ஒரு சில வார்த்தைகளை விட சண்டை வந்து விடுகிறது.

    காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா செய்த சிறப்பான சம்பவம்!

    ரோட்டில் இருக்கும் அனைவரும் இதைப் பார்த்து ஒருவிதமாக பேசி விடுகின்றனர். இந்த மொத்த கோபத்துடன் கோதை அம்மா வீட்டுக்கு செல்கிறார். கண்டிப்பாக தமிழ் - சரஸ்வதியை பயங்கரமாக திட்ட போகிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv

    அடுத்த செய்தி