• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’கடைசி பேச்சிலர் பிறந்தநாள்’ - நம்ம வீட்டு பொண்ணு கொடுத்த அப்டேட்!

’கடைசி பேச்சிலர் பிறந்தநாள்’ - நம்ம வீட்டு பொண்ணு கொடுத்த அப்டேட்!

வைஷாலி தனிகா

வைஷாலி தனிகா

வைஷாலி, கடந்த சில வருடங்களாக சத்யதேவ் -ஐ காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்போது, விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வரும் வைஷாலி தனிகா, பிறந்த நாளன்று தன்னுடைய வருங்கால கணவர் குறித்த சர்ப்பிரைஸ் அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.

வைஷாலி தனிகா, விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார். அந்த தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனின் காதலியான ஐஸ்வர்யாவாக முதலில் நடித்தார். அதன்பிறகு இவர் மாற்றப்பட்டு தீபிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு காயத்ரி நடித்து வருகிறார். இருப்பினும் ஐஸ்வர்யாவாக முதலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வைஷாலி தான்.

அவர் லேட்டஸ்டாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக ஒரு சர்பிரைஸ் நியூஸ் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில், பேச்சிலராக இது என்னுடைய கடைசி பிறந்தநாள் என தெரிவித்த வைஷாலி, அடுத்த பிறந்தநாளில் திருமதி சத்யதேவ் ஆக மாறிவிடுவேன் என கூறி, ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)






வைஷாலி, கடந்த சில வருடங்களாக சத்யதேவ் -ஐ காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்போது, விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், "இது தான் என்னுடைய கடைசி பேச்சிலர் பிறந்த நாள் கொண்டாட்டம். அடுத்த ஆண்டு பிறந்தநாளில் திருமதி சத்யதேவ்வாக மாறிவிடுவேன். இதுவரை என் மீது அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

சத்ய தேவ், நீங்கள் என் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். உங்களுடன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்னுடைய இந்த பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, வருங்கால கணவர் சத்யதேவ்வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வைஷாலி தனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரின் திருமண வாழ்க்கைக்கும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also read... அக்ஷரா ரெட்டி முதல் கோபிநாத் ரவி வரை - பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரம்!

மேலும், திருமணத்திற்குப் பிறகு மற்ற நடிகைகளைப்போல் நீங்களும் நடிப்புக்கு முழுக்கு போட்டு விடாதீர்கள், தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கையையும் ரசிகர்கள் வைஷாலிக்கு விடுத்துள்ளனர். நம்ம வீட்டு பொண்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் மட்டுமில்லாமல் மகராசி, கோகுலத்தில் சீதை, ராஜா ராணி, மாப்பிள்ளை, லக்ஷிமி வந்தாச்சு ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: