• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாஸ்டர் செஃப் தெலுங்கு ஷோவிலிருந்து திடீரென மாற்றப்பட்ட நடிகை தமன்னா - புதிய தொகுப்பாளர் இவர் தான்!

மாஸ்டர் செஃப் தெலுங்கு ஷோவிலிருந்து திடீரென மாற்றப்பட்ட நடிகை தமன்னா - புதிய தொகுப்பாளர் இவர் தான்!

தமன்னா

தமன்னா

மாஸ்டர் செஃப் தெலுங்கிலிருந்து தமன்னா மாற்றப்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை.

  • Share this:
டிஆர்பி ரேட்டிங்கிற்காக பல புதுமையான ஷோக்களை டிவி சேனல்கள் போட்டி போட்டு அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவருவதில் மும்முரமாக இருக்கின்றன. சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரு சமையல் ஷோவை காமெடி கலந்த சுவாரசிய ஷோவாக கொண்டு செல்ல முடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தது ஸ்டார் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ. மணக்க மணக்க சமைப்பதிலும் சரி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதிலும் சரி குக் வித கோமாளி ஷோவை மிஞ்ச இன்னும் வேறு எந்த ஷோவும் களமிறக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

பிரபல முன்னணி சேனல்களில் ஒன்றான சன் டிவி, விஜய் டிவி-க்கு போட்டியாக பல்வேறு நிகழ்ச்சிகளை அவ்வப்போது ஒளிபரப்புவது வாடிக்கை. அதே போல ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற குக் வித் கோமாளி ஷோவை மிஞ்சும் வகையில், வித்தியாசமான சமையல் ஷோவை ஒளிபரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியது சன் நெட்ஒர்க். இதனடிப்படையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மெகா ஹிட் சமையல் ஷோவாக இருக்கும ‘மாஸ்டர் செஃப்’ ஷோவை அறிமுகபடுத்தும் வேலைகளில் இறங்கியது.

இந்த ஹிட் ஷோவின் உரிமை ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்த நிலையில், இந்தியாவில் தமிழ் சேனலான சன் டிவி மற்றும் தெலுங்கு சேனலான ஜெமினி டிவி-யில் இந்த ஷோவை அறிமுகப்படுத்த சன் குரூப் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்ட அறிமுகத்துடன் பிரபல முன்னணி நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வரும் மாஸ்டர் செஃப் தமிழ் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

Also read... தெலுங்குப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகளா?

ஜெமினி டிவி-யில் மாஸ்டர் செஃப் தெலுங்கு ஷோவை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, தெலுங்கு மாஸ்டர் செஃப் ஷோவில் இருந்து நடிகை தமன்னா மாற்றப்பட்டு உள்ளார். தமன்னாவிற்கு பதில் தெலுங்கு திரைப்பட துறையில் பிரபலமாக இருக்கும் நடிகை அனசூயா பரத்வாஜ் புதிய தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் ஏற்கனவே பெங்களூருவின் இன்னோவேட்டிவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் செஃப் தெலுங்கிற்கான பிரத்யேக செட்டில் நடந்த ஷூட்டிங்கில், அனசூயா பரத்வாஜ் தொகுத்து வழங்கிய சில எபிசோட்கள் ஷூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர் செஃப் தெலுங்கிலிருந்து தமன்னா மாற்றப்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை.

எனினும் திட்டமிடப்பட்ட எபிசோட்களை ஒதுக்கப்பட்ட கால்ஷீட்டில் ஷூட் செய்ய முடியாததால், அவரால் தொடர்ந்து இந்த ஷோவில் ஆங்கராக பங்கேற்க முடியவில்லை என்றும், நேரம் இருந்தால் இறுதி போட்டிக்கு முன்பு அவர் மீண்டும் இந்த ஷோவிற்கு திரும்ப கூடும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: