November Story: ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் தமன்னாவின் ’நவம்பர் ஸ்டோரி’!

தமன்னா

ராம் சுப்பிரமணியன் இயக்கியுள்ள நவம்பர் ஸ்டோரியை, ஆனந்த விகடன் குழுமம் தயாரித்துள்ளது. இது 7 அத்தியாயங்களை கொண்டுள்ளது.

  • Share this:
    நடிகை தமன்னா நடித்திருக்கும் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்ன் சமீபத்திய க்ரைம் த்ரில்லர் நவம்பர் ஸ்டோரி கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகை தமன்னா மற்றும் ஜி.எம்.குமார் உண்மையான தந்தை-மகள் பாசத்தை கண்முன் காட்டுகிறார்கள். இதன் ஆழமான கதை மற்றும் நச்சென்ற நடிப்பு, தமிழ் பார்வையாளர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அதிக பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சஸ்பென்ஸ் நிறைந்த க்ரிஸ்ப்பான கதை மற்றும் இதில் நடித்துள்ள நட்சத்திரங்களின் நடிப்பு பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

    ராம் சுப்பிரமணியன் இயக்கியுள்ள நவம்பர் ஸ்டோரியை, ஆனந்த விகடன் குழுமம் தயாரித்துள்ளது. இது 7 அத்தியாயங்களை கொண்டுள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸில் பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இது குறித்து பேசியுள்ள தமன்னா, “நவம்பர் ஸ்டோரி பார்வையாளர்களிடமிருந்து பெற்றுத்தந்த பாராட்டு மற்றும் அன்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது. வெப் சீரிஸ்கள் நல்ல கன்டென்ட்டுடன் வழங்கப்படும்போது அதற்கு முழு அளவில் மக்கள் வரவேற்பை வழங்குவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துள்ளனர்  என்பதை அறிந்துகொள்ளும் போது, நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை காட்டுகிறது” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: