Home /News /entertainment /

நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்களால் கடுப்பாகிய சின்னத்திரை தம்பதி! காரணம் என்ன?

நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்களால் கடுப்பாகிய சின்னத்திரை தம்பதி! காரணம் என்ன?

சமீரா சையத்

சமீரா சையத்

இது போன்று குழந்தையை வைத்து யுடியூப்பில் காசு சம்பாதிக்கிறீர்களா என்கிற பாணியில் பலர் தவறாக கமெண்ட்ஸ்

  சினிமா துறையில் உள்ளவர்கள் தினம்தோறும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாக வேண்டி இருக்கும். குறிப்பாக நெட்டிசன்கள் பலரும் எல்லை மீறிய கருத்துக்களை அவர்கள் மீது வைப்பதால் சாதாரண விஷயங்கள் கூட மிக பெரிய சர்ச்சையாகி வருகின்றன. அந்த அளவிற்கு பலரும் வரம்பு மீறிய கருத்துக்களை கூறி வருகின்றனர். இது பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு நடந்துள்ளது. இப்படிப்பட்ட பிரச்சனைகளால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதே போன்று சிலர் மட்டுமே இவற்றை சரியான முறையில் எதிர்த்து உள்ளனர்.

  அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்கள் இருவருக்கும் இது போன்ற எல்லை மீறிய கருத்துக்கள் வந்ததால் அதை அவர்கள் தைரியமான முறையில் கையாண்டு உள்ளனர். விஜய் டிவியில் சில ஆண்டுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்கிற சீரியலின் மூலம் நடிகர் சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் பிரபலமானார்கள். அந்த தொடரில் நடந்த போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.

  4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இருவரும், அதன் பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். விஜய் டிவியின் டாப் தொடர்களில் ஒன்றாக இருந்த ‘பகல் நிலவு’ சீரியலில் இருந்து, சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் அதில் இருந்து விலகினர். அதன் பிறகு பல தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் இருவரும் நடித்தனர்.

  KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கிறது?

  இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தாரின் முன்னிலையில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு அர்ஹான் என்கிற ஆண் குழந்தையும் திருமணமான சில ஆண்டுகள் கழித்து பிறந்தது. மற்ற பிரபலங்களை போலவே இவர்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். குறிப்பாக இவர்களுக்கென்று உள்ள யுடியூப் சேனலில் அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே போன்று இவர்களின் குழந்தையை வைத்தும் சில வீடியோக்களை பதிவிடுவார்கள்.

  கலைக்கு மொழி தடையில்லை - அஜய் தேவ்கனுக்கு ரம்யா ஸ்பந்தனா பதிலடி!

  இந்நிலையில் இது போன்று குழந்தையை வைத்து யுடியூப்பில் காசு சம்பாதிக்கிறீர்களா என்கிற பாணியில் பலர் தவறாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதுவும் சாதாரணமாக கேட்காமல் மிகவும் தரம் குறைந்த முறையில், “ஏன் இப்படி குழந்தையை வைத்து பிச்சை எடுக்கிறீர்கள்… உங்களுக்கு மட்டும் தான் குழந்தை உள்ளதா” போன்ற மோசமான முறையில் கமெண்ட் செய்துள்ளனர். இந்த கமெண்ட்கள் குறித்து ஷமீராவின் கணவரான நடிகர் அன்வர் சைபர் கிரைமில் புகார் தெரிவிக்க போவதாக கூறி உள்ளார்.

  KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

  அதே போன்று ஷமீராவும் இது குறித்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் "இங்கு நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இப்பதற்காக இருக்கிறோம். ஆனால் இப்படி என்னை இழிவாக பேசினால், இதுவரை நான் பொருத்திருந்தது போல அமைதியாக இருக்க மாட்டேன். நானும் என் கணவரும் சைபர் கிரைம் போலீஸிடம் இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். எங்களை மோசமாக பேசுவோருக்காலுக்கு எங்களின் வாழ்த்துகள். இனி நீங்கள் டைப் செய்யும் முன் யோசித்து செய்யுங்கள்” என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  அடுத்த செய்தி