’நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் அறிமுகம் - ஹீரோயின் ஸ்வாதி நெகிழ்ச்சி!

ஸ்வாதி

இவர்களுடன் நேகா, தீப்தி ராஜேந்திரன், மிதுன், ஜனனி பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்

  • Share this:
‘நினைத்தாலே இனிக்கும்’சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஹீரோயின் ‘ஸ்வாதி’ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் புத்தம் புதிய தொடரான ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் விஜய் டீவியில் ’ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் லீட் ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி, தமிழ் சின்னத்திரையில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர், கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பொம்மி அறிமுகமாகும் காட்சியை பகிர்ந்து, மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 
View this post on Instagram

 

A post shared by Swathi Sharma (@swathi_sharma_24)


ஆனந்த் செல்வன் ‘சித்தார்த்’ கதாப்பாத்திரத்திலும், ஸ்வாதி ‘பொம்மி’ கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். கதைப்படி, மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பொம்மி. தொழில் முனைவோராக ஆசைப்படும் அவர், அதிரசம் செய்வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். தான் செய்யும் அதிரசத்தை சென்னை தெருக்களில், தானே வண்டியில் கொண்டு சென்று விற்பனையும் செய்கிறார். அவளுடைய வியாபாரமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. மிகப்பெரிய இனிப்பகத்தை தொடங்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொம்மியின் முதன்மையாக இலக்கு. அதற்காக கடுமையாக உழைக்கிறாள்.

Also read... ’இந்த சீரியலாவது நல்லா இருக்கனும் கடவுளே’ - ரீ என்ட்ரி கொடுக்கும் நிவிஷா!

அதேநேரத்தில், செல்வந்தர் வீட்டுப் பையனான சித்தார்த், தன்னுடைய படிப்புக்கு ஏற்ப முன்னேறும் முயற்சியில் இருக்கிறார். சித்தார்த்துக்கும், பொம்மிக்கும் இருக்கும் குணாதிசயம் நேரெதிரானது. சில விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், இருவருக்கும் செட் ஆகாது. ஆனால், இருவரும் எதிர்பாராத சூழ்நிலையில் சந்தித்துக்கொள்கின்றனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்படும் சின்ன சின்ன மோதல், கடைசியாக காதலாக மாறுகிறது. பொம்மி, தன்னுடைய இலக்கை நிறைவேற்றுகிறாரா? அதில் சித்தார்த்தின் பங்கு என்பது கதையின் சுவாரஸ்யமான எஞ்சிய பகுதி. 
View this post on Instagram

 

A post shared by Swathi Sharma (@swathi_sharma_24)


இவர்களுடன் நேகா, தீப்தி ராஜேந்திரன், மிதுன், ஜனனி பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகரான சுரேஷ் கிருஷ்ணாவும் நடிக்கிறார். அனுராதாவின் கணவரான இவர், முத்தாரம், அசோகவனம், தெய்வ தந்தம் வீடு, சிவசங்கரி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல் ஒளிபரப்புக்கு முன்பு வெளியான சீரியலின் புரோமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த புதிய சீரியல் குறித்து பேசிய ஜீ தமிழ் பிஸ்னஸ் ஹெட், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிடில் கிளாஸ் பெண் ஒருவர் தொழில் முனைவோராக வருவதற்கு படும் கஷ்டங்களும், அவளது வாழ்வியலையும் இந்த சீரியல் மூலம் அறிந்து கொள்ள முடியும் என கூறிய அவர், ரசிகர்கள் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பை கொடுப்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: