• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விரைவில் முடிவுக்கு வருகிறது சூர்யவம்சம் சீரியல்... எமோஷனலாகிய குழுவினர்!

விரைவில் முடிவுக்கு வருகிறது சூர்யவம்சம் சீரியல்... எமோஷனலாகிய குழுவினர்!

சூர்யவம்சம்

சூர்யவம்சம்

சீரியல் முடிவடைய போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி அன்று திரையிடப்பட்ட பிரபல தொலைக்காட்சி சீரியல் சூரியவம்சம் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது. சீரியல் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் சீரியலில் வரும் நடிகர்கள் நித்யா ராஜ், கரோலின் ஹில்ட்ரூட், மிதுன் ராஜ், அனிதா வெங்கட் மற்றும் பலர் சீரியல் பயணம் முடியப்போவதை எண்ணி எமோஷனலாகி உள்ளனர்.

சூர்யவம்சம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2020 ஆம் ஆண்டு வெளியான குடும்பம் சார்ந்த நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடர் ஜீ தெலுங்கு தொடரான 'அமெரிக்கா அம்மாயி' என்ற தெலுங்கு மொழி சீரியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இந்த தமிழ் தொடரை கே. கார்த்திகேயன் என்பவர் இயக்க, பூர்ணிமா பாக்யராஜ், நிகிதா ராஜேஷ் மற்றும் ஆஷிஷ் சக்ரவர்த்தி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சீரியல் முடிவடைய போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல்களின்படி, இந்த வாரத்திற்குள் சூர்யவம்சம் முடிவடையும் என்றும் சீரியலின் கடைசி அத்தியாயம் ஆகஸ்ட் 21ம் தேதி (சனிக்கிழமை) ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இறுதி அத்தியாயத்திற்கான படப்பிடிப்பை முடித்த பிறகு சீரியல் நடிகர்கள் தங்கள் உணர்ச்சிகளை அவர்களது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



 




View this post on Instagram





 

A post shared by Anitha Venkat (@venkatanita)






அதன்படி, சீரியலில் நடிக்கும் அனிதா வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "சூரியவம்சம் சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு .... @mahalingam.ramachandran @dhachayani44 @carohiltrud @kirubaa_actress_official @poornimabhagyaraj @aashishchakravarthi @iamnikithaa @i.am_madhan @muthulakshmihairdresser (sic)" என்று குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Nithya Raj (@inithyaraj)






இதையடுத்து நித்யா ராஜ் கடைசி நாள் படப்பிடிப்பின் வீடியோவை பகிர்ந்ததோடு "மிஸ்ஸிங் சூர்யவம்சம் குழு (sic)" என்று கேப்ஷன் செய்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Mithun Raj (@mithun_actor_official)






அதேபோல, குழுவின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்த மிதுன் ராஜ், “கடைசி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் "சூரியவம்சம்" (sic) " என்று எழுதியிருந்தார். இதையடுத்து, கரோலின் ஹில்ட்ரூட், "சூர்யவம்சத்தில் இருந்து எங்கள் கடைசி ரீல்கள்." என்று பகிர்ந்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Caroline (@carohiltrud)






சூர்யவம்சம் நாடகத்தில் நிகிதா ராஜேஷ் (சமந்தா ஆக சாம்), ஆஷிஷ் சக்ரவர்த்தி (சூர்யா), பூர்ணிமா பாக்யராஜ் (அன்னபூரணி என அன்னம்மாள்), நித்யா ராஜ் (சமன்யாவாக), அனிதா வெங்கட் (ராஜி), கரோலின் ஹில்ட்ரூட் ஜெயந்தி), மிதுன் ராஜ் (அபிஷேக்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Also read... வாய் தவறி பேசிட்டேன்.. தப்புதான் - ஜாமின் கோரி நடிகை மீரா மிதுன் மனு!

தனது மகள் கல்யாணி, அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்ததற்காக குடும்பத்திலிருந்து அவளை ஒதுக்கிவைக்கும் அன்னபூரணி பற்றிய கதை தான் சூர்யவம்சம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கல்யாணியின் மகள் சமந்தா தனது தாயை மீண்டும் குடும்பத்தில் இணைக்க முயற்சிக்கும் நிகழ்வுகள் தான் சீரியலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது சீரியல் முடிவடைய இருப்பதால் இறுதி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: