காற்றுக்கென்ன வேலி சீரியல் சூர்யாவும் - வெண்ணிலாவும் ஒட்டுமொத்த சீரியல் குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதற்கான காரணமும் தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் இளைஞர்களின் ஃபேவரெட் என்ற லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது’ காற்றுக்கென்ன வேலி’ தொடர் தான். காதல், காலேஜ் லைவ், நண்பர்கள், போட்டி என இந்த கால இளைஞர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த சீரியலில் இருப்பதால் குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் சூர்யா - வெண்ணிலா கெமிஸ்ட்ரி. இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின்களான சூர்யா - வெண்ணிலா ரோல், இவர்களின் காதல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?
ஆரம்பத்தில் கல்லூரி ஆசிரியரை மாணவி காதலிப்பதா? என பல சர்ச்சைகளும் வெடித்தன. ஆனால் அது காதலை தாண்டி மரியாதையானது, வெண்ணிலாவை படிக்க வைக்க அனைத்து உதவிகளையும் செய்து, அவரை எல்லா போட்டியிலும் வெற்றியடை செய்து ஒரு தூண் போல் சூர்யா ரோல் பயணிக்க தொடங்கியது. பிறகு இவர்களின் காதலும் கொண்டாடப்பட்டது . இந்த ஜோடிக்கு சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.
வருங்கால மனைவியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சீரியல் நடிகர்!
சீரியலின் கதைப்படி தற்போது வெண்ணிலாவுக்கு பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் சீரியல் குழு ஒரு சந்தோஷமான தருணத்தையும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்கள். அதாவது காற்றுக்கென்ன வேலி தொடர் வெற்றிக்கரமாக 400 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை சூர்யா, வெண்ணிலாவுடன் சேர்ந்து இந்த சீரியலின் இயக்குனர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கொண்டாடி இருக்கிறார்கள். ஒருவரையொருவர் கேக் கொடுத்து சந்தோஷத்துடன் இந்த வெற்றிக்கரமான விஷயத்தை கேக் வெட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள் . இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.