Home /News /entertainment /

மகனை பார்த்து கதறி அழுத சர்வைவர் விஜயலட்சுமி!

மகனை பார்த்து கதறி அழுத சர்வைவர் விஜயலட்சுமி!

சர்வைவர் விஜி

சர்வைவர் விஜி

எத்தனை கோடி கொடுத்தாலும் சரி ,ஜெயித்தாலும் சரி இந்த தாய் பாசத்திற்கு இணையாகாது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    சர்வைவர் தமிழ் டைட்டில் வின்னரும் நடிகையுமான விஜயலட்சுமி தனது மகனை பார்த்து தேம்பி தேம்பி அழும்  வீடியோ இணையவாசிகளின் கண்களை குளமாக்கியுள்ளது. எதற்கு விஜி அப்படி அழுதார் என பார்க்கலாம் வாங்க.

    பிக்பாஸிற்கு போட்டியாக ஒளிபரப்பாகி வந்த சாகச ரியாலிட்டி ஷோவான ஜீ தமிழின் "சர்வைவர்" நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவின் டைட்டில் வின்னர் நடிகை விஜயலட்சுமி ஆவார். ஆண்களுக்கு நிகராக போட்டியிட்டு 1 கோடியை தட்டி சென்ற விஜிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அதே நேரம், சர்ச்சைகளும் வெடித்தன. கிட்டத்தட்ட 90 நாட்கள் இந்த போட்டிக்காக விஜயலட்சுமி தனது குடும்பத்தாரை பிரிந்து தீவில் இருந்தார்.

    இதையும் படிங்க.. திருமணம் முடிந்த சில நாட்களில் கலர்ஸ் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்

    குறிப்பாக அவரின் 3 வயது மகன் மற்றும் கணவரை பிரிந்து விஜயலட்சுமி தீவிரமாக சர்வைவர் நிகழ்ச்சியில் விளையாடி வந்தார். வெயிலில் சுற்றி திரிந்ததால் விஜியின் நிறம் அப்படியே மாறியது. ஆனால் இந்த அனைத்து கஷ்டங்களையும் டைட்டில் வின்னர் பட்டம் மறக்க செய்தது. மீண்டும் சென்னைக்கு திரும்பிய பின்பு விஜி பல வீடியோக்களை வெளியிட்டார். தனது அப்பா, அக்கா, தங்கையை சந்தித்தது, அவர்களுடன் சேர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியின் ஃபைனல்ஸை பார்த்தது, நிறத்தை மாற்ற பியூட்டி பாலருக்கு சென்றது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க.. Bigg Boss eviction : இந்த வாரம் வெளியேற போவது இவரா? பிக் பாஸ் அல்டிமேட்டில் அடுத்த ட்விஸ்ட்!

    தனது மகனை விஜி 90 நாட்களுக்கு பிறகு பார்த்த தருணங்கள் தான் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. வீட்டுக்கு வரும் விஜி, நேராக தன்னுடைய மகன் நிலன் ரூமுக்கு செல்கிறார். அங்கு குழந்தை தூங்கி கொண்டிருக்க, அவன் பெயரை சொல்லி கூப்பிடுகிறார். குழந்தை பாதி தூக்கத்தில் கண் விழித்து யார் என்று பார்க்கிறது. உடனே விஜி “அம்மா வந்துட்டேன்னு” சொல்ல அந்த குழந்தை அப்படியே அம்மாவை கட்டியணைத்து கொள்கிறது. விஜிக்கும் அழுகை தாங்க முடியவில்லை. எமோஷனில் கதறி அழுது விடுகிறார். தாய் பாசத்திற்கான இந்த வீடியோவை விஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)






    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை எத்தனை கோடி கொடுத்தாலும் சரி ,ஜெயித்தாலும் சரி இந்த தாய் பாசத்திற்கு இணையாகாது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Instagram, Zee tamil

    அடுத்த செய்தி