ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்வைவர் தமிழ்: சவாலில் வென்று ரூ.1 கோடியை தட்டி சென்ற விஜயலட்சுமி!

சர்வைவர் தமிழ்: சவாலில் வென்று ரூ.1 கோடியை தட்டி சென்ற விஜயலட்சுமி!

சர்வைவர் விஜி

சர்வைவர் விஜி

ஃபைனலிஸ்ட்டிற்காக நடத்தப்பட சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்த நிலையில் ஒரு கட்டத்தில் நடிகர் சரண் தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரில் விழுந்து விட்டார். அடுத்த நொடியே தொகுப்பாளர் அர்ஜுன், விஜி இஸ் த வின்னர் என்று உற்சாக குரலெழுப்பி விசில் அடித்து நடிகை விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் இருக்கும் பல முன்னணி டிவி சேனல்கள் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி-யின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழக மக்களிடையே மிக பிரபலமாக இருந்து வருகிறது. தற்போது பிக்பாஸ் தமிழின் சீசன் 5 ஒளிபரப்பில் உள்ள நிலையில், பிக்பாஸிற்கு போட்டியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சாகச ரியாலிட்டி ஷோவான சர்வைவர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு ஒளிபரப்பான "சர்வைவர்" ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக வெள்ளித்திரை நடிகர்கள் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி , விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். காடர்கள் மற்றும் வேடர்கள் என 2 டீம்களாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் இந்த ஷோவில் பங்கேற்க வைக்கப்பட்டனர்.

சர்வைவரில் பங்கேற்ற போட்டியாளர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் ஒரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்டு கடைசியாக விஜயலட்சுமி, வானசா, சரண் ஆகியோரே இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். ஃபைனலிஸ்ட்டிற்கான போட்டியில் விஜயலட்சுமி, நாராயணன், வானசா, உமாபதி, சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 90 நாட்கள் என்ற லிமிட்டில் நடந்த இந்த ரியாலிட்டி ஷோவில் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகி அசத்தினார் நடிகை விஜயலட்சுமி.

ஃபைனலிஸ்ட்டிற்காக நடத்தப்பட சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்த நிலையில் ஒரு கட்டத்தில் நடிகர் சரண் தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரில் விழுந்து விட்டார். அவர் விழுந்த அடுத்த நொடியே தொகுப்பாளர் அர்ஜுன், விஜி இஸ் த வின்னர் என்று உற்சாக குரலெழுப்பி விசில் அடித்து நடிகை விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பேசிய நடிகை விஜயலட்சுமி, இந்த விசில் தான் சார் என்னுடைய மோட்டிவேஷன் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே சர்வைவர் ஃபைனலில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமி சர்வைவர் ஷோவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சர்வைவரில் வெற்றி பெற்ற விஜயலட்சுமிக்கு, ஷோ தொகுப்பாளரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பல திடகாத்திரமான ஆண்களே சோர்ந்து பின்வாங்கிய இந்த சர்வைவர் ரியாலிட்டி சவால் ஷோவில், இறுதி வரை அசராமல் பங்கேற்று வின்னர் தட்டில் மற்றும் ரூ.1 கோடியை தட்டி சென்றுள்ள ஒரு குழந்தைக்கு தாயான நடிகை விஜயலட்சுமிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Survivor Tamil, Vijayalakshmi, Zee tamil