ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் சமீபத்தில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறின.
லேட்டஸ்ட் எபிசோடில் நிகழ்ந்தவை போட்டியாளருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் வேடர்கள் டீமிற்கு புதிதாக வந்த விஜயலட்சுமி மற்றும் சரண் சக்தி ஆகியோரால் நிகழ்ந்த சம்பவங்கள், இதனால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் போட்டியின் விதிமுறைகள் பற்றி விஜயலட்சுமி சரமாரியாக எழுப்பிய கேள்விகள் உள்ளிட்டவை எபிசோடை பரபரப்பாக்கின.
முன்னதாக புதிதாக வந்த மேற்கண்ட இருவரில் ஒருவரை எலிமினேட் செய்ய வேடர்கள் டீம் முடிவெடுக்கும் சூழல் ஏற்பட்டது. நடிகர் நந்தா விஜயலட்சுமிக்கு சப்போர்ட் செய்தார், ஐஸ்வர்யாவோ சரணுக்கு சப்போர்ட் செய்தார். சர்வைவர் தமிழில் தொடர்ந்து கூட்டப்பட்ட ட்ரைபல் பஞ்சாயத்தில் நடிகர் சரண் சக்தி ரகசியமாக மொபைல் பயன்படுத்தியது பற்றிய சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் சரணுக்கு எதிராக 5 ஓட்டுகளும், விஜயலட்சுமிக்கு எதிராக 2 ஓட்டுகளும் விழுந்ததால் சரண் தான் வெளியேற வேண்டும் என்று அர்ஜுன் முதலில் சொன்னார். பின்னர் சரணுக்கு கடைசி லைஃப் லைனை பயன்படுத்த இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவருக்கு கோல்டன் கலர் பால்ஸ் வந்ததால் அவர் தப்பினார்.
ஆனாலும் இப்போது அடுத்த ட்விஸ்ட் அரங்கேறியது. அதாவது தப்பி பிழைத்த சரண், வேறு ஒருவரை எலிமினேட் செய்ய தேர்வு செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில்
வேடர்கள் டீமில் ஏற்கனவே இருப்பவர்களை செலக்ட் செய்யாமல் புத்திசாலித்தனமாக, விஜயலட்சுமியை செலக்ட் செய்தார் சரண். இதனை தொடர்ந்து பேசிய தொகுப்பாளர் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ட்ரைபல் பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சரண் வெளியேறி இருக்க வேண்டும் என்றாலும், விதிகளின் படி செயல்பட்டதால் சரண் பெற்ற ஸ்பெஷல் பவர் காரணமாக தற்போது விஜயலட்சுமி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து சோகத்தில் இருந்த விஜயலட்சுமியிடம் நீங்கள் கேமில் தொடர விரும்பினால் மூன்றாம் உலகத்திற்கு செல்லலாம் என்ற ஆப்ஷனை கொடுத்தார். தொடர்ந்து அங்கு சென்ற விஜயலட்சுமி, ஏற்கனவே அங்கிருக்கும் விஜே பார்வதி மற்றும் காயத்திரி ரெட்டியிடம் மனக்குமுறல்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் மூவரையும் அழைத்து
அர்ஜுன் பேசிய போது, ரகசியமாக போன் பேசி தவறு செய்த சரண் என்னை எப்படி வெளியேற்ற முடிந்தது இது என்ன விதிமுறை என்று கேள்வி எழுப்பினார்.
விவாகரத்தில் முடிந்த திருமணம்.. பாவனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! பிக் பாஸ் இசைவாணியின் சொல்லப்படாத கதை
ஆனால் இதற்கு பதிலளித்த அர்ஜுன், சர்வைவர் கேமின் ஃபார்மெட்டை கேள்விக்குள்ளாக்குவது சரியல்ல, அதிர்ஷ்டமும் கேமில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். பின்னர் நடந்த டாஸ்க்கில் வெள்ளை ஸ்டோன்களை பெற்றதால் பார்வதி மற்றும் காயத்திரி ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
விஜயலட்சுமிக்கு கருப்பு ஸ்டோன் கிடைத்ததால் ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் நடந்த டாஸ்க்கில் தோற்று பார்வதி ஷோவிலிருந்து எலிமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.