• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காட்டுக்குள் அர்ஜூன் கூட்டிய பஞ்சாயத்து .. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் அவுட்!

காட்டுக்குள் அர்ஜூன் கூட்டிய பஞ்சாயத்து .. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் அவுட்!

சர்வைவர் ஷோ

சர்வைவர் ஷோ

அர்ஜூனின் இந்த வார பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. போட்டியாளர்களைப் பொறுத்தவரை காயத்திரி எலிமினேஷன் ஆகிவிட்டார்.

  • Share this:
    சர்வைவர் தமிழ், செம டுவிஸ்டாக சென்று கொண்டிருக்கிறது. வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் பஞ்சாயத்தை கூட்டுவதுபோல், அர்ஜூன் காட்டுக்குள் பஞ்சாயத்தைக் கூட்டினார்.

    காடர்கள், வேடர்கள் என இரு குழுக்களாக இருக்கும் நிலையில், காடர்கள் அணியில் இருக்கும் பஞ்சாயத்தை தோண்டித் துருவினார் அர்ஜூன். பஞ்சாயத்து தொடங்கும் முன்பே, செம டுவிஸ்டுடனேயே, ஆரம்பித்தார். அது என்னவென்றால் காடர்கள் நாமினேஷன் புரோசஸில் அணித் தலைவரையும் நாமினேட் செய்ய முடியும் என கூறிவிட்டார்.இம்யூனிட்டி சேலஞ்ச் தோல்வி குறித்து முதலில் அணித் தலைவரான காயத்திரியிடம் இருந்து விசாரணை தொடங்கியது. இந்தப் போட்டியில் ராம் முறையாக செயல்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். ராமும், அந்த போட்டியில் முழுமையான பங்களிப்பைக் கொடுக்கவில்லை என முழுமையாக சரணாகதியடைந்தார். மற்றவர்களும் ராமின் செயல்பாட்டை குறைகூறினாலும், அவர் சராணாகதியடைந்ததால், அனைவரது கோபமும் அணித் தலைவரான காயத்திரி மீது திரும்பியது.

    டென்ட் போடும்போது காடர்கள் குழுவில் ஏற்பட்ட மோதல் குறித்து விக்ராந்த், உமாபதி, காயத்திரியிடம் அர்ஜூன் கேட்டார். அதற்கு பதில் அளித்த காயத்திரி, நான் எப்போதும் பாஸ்போல் இருக்க வேண்டும் என நினைக்கவில்லை, அதனால் அடிக்கடி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தார். ஆனால், அவர் மீது விஜயலட்சுமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காயத்திரியின் மேனரிசம் பொருத்தமாக இருக்கவில்லை என அவர் நடந்து கொண்ட இடங்களை பின்பாயிண்டாக சுட்டிக்காட்டினர். மேலும், குழுவாக பேசிக்கொண்டிருக்கும்போது காயத்திரி பாதியில் சென்றதையும் விஜயலட்சுமி குறிப்பிட்டார்.

    காயத்திரி குறிப்பிட்ட நேரத்தில் எழுவதில்லை, சரியான நேரத்தில் எந்த வழிகாட்டல்களையும், இன்ஸ்டரக்ஷன்களையும் கொடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். அணியில் உள்ளவர்கள் அனைவரும் காய்த்திரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால், அர்ஜூன் அணித் தலைவராக காயத்திரியின் செயல்பாடு எப்படி? என மார்க் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். லேடி காஷ்யைத் தவிர மற்ற அனைவரும் 5 மற்றும் அதற்கு கீழாக மட்டுமே மார்க் கொடுத்தனர். லேடி காஷ் மட்டும், அவரது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்பி 6 மார்க்குகளை கொடுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எலிமினேஷனுக்கு இந்திரஜாவை, காயத்திரி தேர்ந்தெடுத்தது குறித்தும் பலரும் காயத்திரியை கேள்வி எழுப்பியதுடன், அவரின் முடிவுக்கு எதிராக தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். இறுதியாக, எலிமினேஷனுக்கான மறைமுக வாக்கு செலுத்துதல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று எலிமினேஷனுக்கு சென்றார் காய்த்திரி. ஆக்ஷூவலாக ராம் செல்ல வேண்டியது. ஆனால் எதிர்பாராத டுவிஸ்டாக காயத்திரி மாட்டிக்கொண்டார். இறுதியாக, போட்டியில் தொடர லக்கி கேமும் காயத்திரிக்கு கொடுக்கப்பட்டது. சில்வர் மற்றும் கோல்டு என இரு பந்துகள் மறைத்து வைக்கப்பட்டு, அதில் கோல்டு பால் கிடைத்தால் தொடரலாம், சில்வர் பால் கிடைத்தால் வெளியேறலாம் என கூறப்பட்டது.

    அதிலும் காயத்திரிக்கு சில்வர் பால் மட்டுமே கிடைத்து எலிமிஷேன் ஆனார். இவ்வாறாக, அர்ஜூனின் இந்த வார பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. போட்டியாளர்களைப் பொறுத்தவரை காயத்திரி எலிமினேஷன் ஆகிவிட்டார். உண்மையில், ஏற்கனவே எலிமினேஷன் ஆன சிருஷ்டி, இந்திரஜா, காயத்திரி ஆகிய மூவரும் 3ம் தீவான தனித்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நடக்கும் போட்டியில் தோல்வியடையும் ஒருவர் போட்டியில் இருந்து வெளியேற உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: