Home /News /entertainment /

என்ன ஒரு புத்திசாலிதனம்... சர்வைவர் நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் பெசன்ட் ரவி!

என்ன ஒரு புத்திசாலிதனம்... சர்வைவர் நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் பெசன்ட் ரவி!

பெசன்ட் ரவி

பெசன்ட் ரவி

அவரது யோசனை நன்றாக வேலை செய்தது மற்றும் அவரது டீம் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது.

  ஒரு பக்கம் தெரிந்தும், தெரியாமலும் இயற்கையை அழித்து கொண்டிருக்கும் நாம் மறுபக்கம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்க இயற்கையை தேடி தான் ஓடி கொண்டிருக்கிறோம்.

  அமெரிக்காவின் டிவி வரலாற்றில் மெகாஹிட் படைத்த சாதனை ரியாலிட்டி ஷோவான "சர்வைவர்" ஜீ தமிழ் சேனலில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த அதிரடி ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த "சர்வைவர்" ரியாலிட்டி ஷோவில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

  இவர்களில் தற்போது 16 பேர் மட்டுமே வேடர்கள் மற்றும் காடர்கள் என 2 டீம்களாக பிரிக்கப்பட்டு உள்ளனர். இந்த இரு குழுவினரிடையே தான் சவால்கள் நிறைந்த போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் என்ற தனி தீவில் நடைபெற்று வரும் இந்த சர்வைவர் ஷோவில் நடிகர் விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி, நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா, நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி பிரியா, நடிகர் ராம்சி, லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூர் பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மேலும் இருவர் தேவைப்படும் போது வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் களமிறக்கபட உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சர்வைவர் தமிழின் லேட்டஸ்ட் எபிசோடில் காடர்கள் கடைசியாக தீப்பொறி உருவாக்க ரொட்டியை தயார் செய்தனர். மறுபுறம் சுமார் 3 நாட்கள் வரை பட்டினி கிடந்த வேடர்கள், இறுதியாக சில மரவள்ளிக்கிழங்குகளை கண்டுபிடித்து பசியாறினர். அப்போது நடிகர் அம்ஜத் கான் மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் தங்கள் குடும்பத்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் இருவரையும் டீமின் பிற உறுப்பினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் இரு குழுவினருக்கும் சில சவாலான டாஸ்க்கை கொடுக்கிறார். ஒரு பெரிய மர கொள்கலனை இழுத்து கொண்டே சென்று ஆங்காங்கே இருக்கும் மரங்களை சேமித்து மீண்டும் பழைய இடத்திற்கே திரும்ப வேண்டும் என்ற கடினமான டாஸ்க் அது. பின் இரு டீம்களும் கேம்ப்ஃபயர்களை அமைக்கும் சூழல் ஏற்பட்டது. வேடர்கள் டீம் முன்சென்ற நிலையில், இது தொடர்பான டாஸ்க்கில் காடர்கள் டீம் பின்தங்கியது.

  தொகுப்பாளர் அர்ஜுன் கயிற்றை நெருப்பால் எரிக்க அனுமதித்ததன் மூலம் டாஸ்க்கை சற்று எளிதாக்கினார். அப்போது வேடர்கள் டீமை சேர்ந்த பெசன்ட் ரவி புத்திசாலித்தனமாக ஒரு முனையில் இருந்து கயிற்றை எரிக்க முயன்றார். அவரது யோசனை நன்றாக வேலை செய்தது மற்றும் அவரது டீம் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது. இதனால் வேடர்கள் அணி தற்போது வெற்றி அணியாக இருப்பதால், அந்த டீமுக்கு நெருப்பு பற்ற வைக்கும் கருவி, தார்பாய், நாற்காலி, கயிறுகள் மற்றும் பெட்ஷீட்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் வேடர்கள் டீம் உற்சாகமடைந்து பெசன்ட் ரவியை கொண்டாடினர். மறுபுறம் தோல்வியுற்ற காடர்கள் துவண்டு போயினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Survivor Tamil, Zee tamil

  அடுத்த செய்தி