ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாயடைத்து போன ரசிகர்கள்...'Survivor' ஐஸ்வர்யாவின் வைரல் ஃபோட்டோ ஷூட்!

வாயடைத்து போன ரசிகர்கள்...'Survivor' ஐஸ்வர்யாவின் வைரல் ஃபோட்டோ ஷூட்!

சர்வைவர் ஐஸ்வர்யா

சர்வைவர் ஐஸ்வர்யா

"இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் பதிவிட தைரியம் இல்லாமல் இருந்தேன்"

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோ சர்வைவர்.

  சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் பங்கேற்று காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு டீம்களாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். வெள்ளித்திரை பிரபலங்களான நடிகர் விக்ராந்த், நடிகை விஜயலட்சுமி, பெசன்ட் ரவி, உமாபதி, காயத்திரி, சிருஷ்டி டாங்கே, இந்திரஜா என பலர் இதில் அடக்கம்.

  இந்த ஷோவில் எலிமினேட் ஆகி உள்ள சிருஷ்டி டாங்கே, இந்திரஜா மற்றும் காயத்ரி ஆகியோர் வேறு ஒரு தீவில் தனியாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே இந்த ஷோவில் பிரபலங்கள் மட்டுமின்றி ஹெல்த் கோச் மற்றும் அத்தலெட் வீராங்கனையான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பங்கேற்று உள்ளார். இவர் சான்றளிக்கப்பட்ட தனிப்பட்ட பயிற்சியாளரும் ஆவார். சர்வைவர் ஷோவில் பங்கேற்றுள்ளதன் மூலம் பல இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

  இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் எப்போதும் போல்டாகவே காணப்படுவார். இதனிடையே சோஷியல் மீடியாவில் அவ்வப்போது தனது ஃபோட்டோ ஷூட் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்யும் பழக்கம் உடையவர். இன்ஸ்டாவில் இவர் ஷேர் செய்துள்ள ஃபோட்டோக்கள் தற்போது அதிகளவில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் இன்ஸ்டாவில் பல உடற்பயிற்சி வீடியோக்களுடன் அவரது கவர்ச்சிகரமான மாடலிங் புகைப்படங்களும் ஷேர் செய்யப்பட்டு உள்ளன.

  இந்த ஹாட்டான ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி நெட்டிசன்களை கிறங்கடித்து வருகின்றன. இதனிடையே ஃபோட்டோ ஒன்றில் மேலாடை அணியாமல் பின் முதுகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் பதிவிட தைரியம் இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்று அதை செய்துள்ளேன்.

  நான் இந்த ஃபோட்டோக்களை பாதிக்கப்படும் செயலுடன் தொடர்புபடுத்துகிறேன். பாதிக்கப்படுவது ஏன் பலவீனமாக கருதப்படுகிறது என்று எப்போதாவது நீங்கள் உங்களிடமே கேட்டுள்ளீர்களா.? என்று கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து எழுதியுள்ள அவர், உங்கள் எண்ணங்களை மூடிமறைத்து ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவது எவ்வளவு கடினமானது ..? உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் திறன் மற்றும் ஒவ்வொரு தருணத்திலும் உங்களின் உண்மையான வெர்ஷனை ஏற்று கொள்வது என்பது ஒரு ஆசீர்வாதம்.
   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Aishwarya Krishnan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwarya.krish)  உங்கள் ஆழ்ந்த ஆசைகள், விருப்பங்கள் மற்றும் எண்ணங்களுடன் நீங்கள் இணைந்திருப்பது மிக முக்கியம். இந்த உணர்வுகளை ஒப்புக்கொள்ளும் திறனும் அவற்றை வெளிப்பாடாக வெளிப்படுத்துவதும் தான் உங்கள் பலம். வெளிப்படுத்துவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் சுதந்திரமான உணர்வுகளில் ஒன்று என்று அந்த போஸ்ட்டில் கூறி இருக்கிறார். சுமார் 37 வாரங்களுக்கு முன் ஐஸ்வர்யா கிருஷ்ணன் போஸ்ட் செய்துள்ள இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருவதோடு, அவரது துணிச்சலான முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Zee tamil