Home /News /entertainment /

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அழகான தமிழ் முகம்! யார் இந்த பிக் பாஸ் ஸ்ருதி?

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அழகான தமிழ் முகம்! யார் இந்த பிக் பாஸ் ஸ்ருதி?

பிக் பாஸ் 5 ஸ்ருதி

பிக் பாஸ் 5 ஸ்ருதி

அப்பாவால் வெறுக்கப்பட்ட பெண் குழந்தை என ஸ்ருதியின் கதை பலரையும் ஏற்கெனவே கண்ணீர் சிந்த வைத்தது.

  பிக் பாஸ் 5 சீசனில் டஸ்கி ஸ்கீன் டோனில் அழகான தமிழில் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கும் ஸ்ருதி பெரியசாமி பற்றிய தகவல்கள்.

  இந்த முறை பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்களாக களம் இறங்கி இருக்கும் போட்டியாளர்கள் பலரும் அதிகம் பரீட்சையம் இல்லாத முகங்கள் தான். ஆனாலும் நாடியா சேங்கை தவிர மற்ற எல்லோரும் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். ஹிப் பாப் ஸ்டைலில் கலக்கும் ஐக்கி பெர்யின் உருவத்தை பார்த்து,  வெளிநாட்டை சேர்ந்தவர் என நினைத்த போது திருநெல்வேலி பக்கத்தில் தான் சொந்த கிராமம் என அறிமுகம் ஆன போது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான். அந்த வகையில் வீட்டில் டஸ்கி ஸ்கீன் டோனில் தெளிவான தமிழ் பேச்சுடன் நீளமான முடியுடம் நம்ம ஊர் பெண்களை ஞாபகப்படுத்தும் தோற்றத்தில் இருப்பவர் ஸ்ருதி பெரியசாமி. இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர்.

  இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்ததால், விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பை பெற்று அதன் மூலம் நல்ல வேலையில் கைநிறைய சம்பாதித்து வந்தார். தன்னுடைய சம்பளத்தால் வீட்டையும் அம்மாவையும் கவனித்து வந்தார். இவரின் ஃபேமலி பற்றி ஏற்கெனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தார். இவருடைய அம்மா, இவருடைய அப்பாவுக்கு இரண்டாவது மனைவி. 20 வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம், அப்பாவால் வெறுக்கப்பட்ட பெண் குழந்தை என ஸ்ருதியின் கதை பலரையும் ஏற்கெனவே கண்ணீர் சிந்த வைத்தது.

  கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்! யாரு சாமி நீங்கெல்லாம்?

  இவர் மாடலிங் துறையில் வந்தது ஒரு விபத்து போல தான். ஸ்ருதியின் தோழி மாடலிங் செய்து வந்த போது அவருடைய கோஸ்டார் ஒருவர் அன்றைய தினம் வராததால் கடைசி நேரத்தில் ஸ்ருதி மேடை ஏறினார். கைத்தட்டல்களை அள்ளினார். அதன் பின்பு வாய்ப்புகள் குவிய அதையே கெரியராக தேர்வு செய்தார். இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க காரணமே அந்த அம்மன் ஃபோட்டோஷூட் தான். தமிழ் கடவுள் லட்சுமி கருப்பு நிறத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சுருதியை வைத்து பிரபல நிறுவனம் ஒன்று புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. இந்த புகைப்படமானது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  சுருதி🌻 Suruthi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suruthiperiyasamy)


  அதன்பிறகு சுருதிக்கு மாடலிங் துறையில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் பெற்று, தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். நிகழ்ச்சியில் தனக்கு தோன்றிய கருத்தை முகத்திற்கு முன்னால் சொல்லும் தைரியம் கொண்ட ஸ்ருதி, இதுவரை குரூப்பிஸம் செய்து எந்த கேமையும் ஆடவில்லை. நன்கு சமைக்க தெரிந்தவர். வீட்டில் மீந்த உணவை வேஸ்ட் செய்யாமல் வடுகம், அப்பளம் செய்து கலக்கி வருகிறார். இவரின் பேச்சு, முகம், முடி எல்லாமே நம் வீட்டு பெண்களை ஞாபகப்படுத்துகிறது. தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஸ்ருதி எப்படி விளையாடுவார் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி