Home /News /entertainment /

வந்தார் போனார் ரிப்பீட்டு – பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி

வந்தார் போனார் ரிப்பீட்டு – பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி

சுரேஷ் சக்ரவர்த்தி

செவ்வாயன்று ஒளிபரப்பான 24 மணிநேர ஸ்ட்ரீமில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  தற்போது ஒன்பது போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 7 வாரங்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இபோ சிகிச்சையை பொறுத்தவரை ஒரு சில போட்டியாளர்களை என்றுமே நாம் நினைவில் வைத்துக் கொள்வோம் அந்த வகையில் பிக்பாஸ் ரெகுலரான சீனாவில் இருந்தாலும் சரி அல்டிமேட் ஆக இருந்தாலும் சரி சுரேஷ் சக்கரவர்த்தியை தவிர்க்கவே முடியாது.

  பிக்பாஸ் தாத்தா என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டு போட்டியைப் பரபரப்பாக்கினார். பலருக்கும் இவருடன் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தியோ அந்த பிரச்சனைகளை பெரிது படுத்தாமல், அடுத்தடுத்த போட்டியில் மிகவும் சுவாரசியமாகவும் மும்முரமாக விளையாடுவார். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

  பிக்பாஸ் சீசன் நான்கிலே இரண்டு முறை சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொண்டார். அதேபோல பிக்பாஸ் அல்டிமேட்டிலும் முதல் வாரத்திலேயே வெளியேறி மீண்டும் வைல்டு கார்டாக என்ட்ரி கொடுத்தார்.

  வழக்கமாக உள்ளே வந்தவுடன் மறுபடியும் அடுத்த வாரம் எலிமினேட் ஆகி விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த சுரேஷ் சக்ரவர்த்தி ஆட்டத்தை மிகவும் சுவாரஸ்யப்படுத்தினார். வெளியில் பிக்பாஸ் அல்டிமேட் எப்படி பார்க்கப்படுகிறது, யார் யாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளது என்றெல்லாம் பல போட்டியாளர்களிடம் ஹின்ட் செய்து தெரிவித்தார். அதேபோல கடந்த வாரம் வெளியேறிய அனிதா சம்பத்துடனும் முரண்பாடு இருந்தாலும், அவருக்கும் குறிப்புகள் வழங்கினார்.

  கடந்த வாரம் நடைபெற்ற கோழிமுட்டை டாஸ்க் களை கட்டியதற்குக் காரணம் சுரேஷ் சக்ரவர்த்தி பருந்தாக செயல்பட்டது தான். ஆனால் நாள் முழுவதும் வெளியிலேயே அமர வேண்டும் அதே நேரம் வயது காரணமாக கொஞ்சம் அவதியும் பட்டார்.

  சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார் எனவே இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், செவ்வாயன்று ஒளிபரப்பான 24 மணிநேர ஸ்ட்ரீமில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு திடீரென்று உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சுரேஷ் சக்கரவர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வாந்தி எடுத்தார். அனைத்து ஹவுஸ்மேட்களும் பதறி அடித்துக்கொண்டு அவரை கவனித்து உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாதபோது பிக் பாஸ் வீட்டிலேயே மருத்துவர் வந்து தனி அறையில் செக்கப் செய்து மருந்துகள் தருவது வழக்கம். ஆனால் அதையும் கடந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலக்குறைபாடு தீவிரமாக இருப்பதாக கண்டறியப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

  சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?

  கடந்த சீசனில் பிரியங்காவுக்கும் இதேபோல சீசன் இறுதி கட்டத்தை நோக்கி செல்லும்போது உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு சில முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரன்னராக வந்தார். அதேபோல சுரேஷ் சக்கரவர்த்தியும் மீண்டும் திரும்பி வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருந்த போது, அதிர்ச்சிகரமான தகவல் பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது. சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் போட்டியில் தொடர விரும்பவில்லை என்று தெரிவிப்பதாகவும், இதனால் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியதாகவும் அறிவித்தார்.

  படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

  இதுவரை பிக்பாஸ் பிக்பாஸ் சீசன்களிலேயே நான்கு முறை ஒரே போட்டியாளர் மீண்டும் மீண்டும் வந்த பெருமை சுரேஷ் சக்கரவர்த்தியை மட்டும் தான் சேரும்.

  முதல் முறை எலிமினேஷனில், அவர் ஓட்டு கம்மியாக வாங்கியதால் எலிமினேட் செய்யப்படவில்லை. அவருடைய அக்காவான ஸ்ரீப்ரியா மகளின் திருமணம் லண்டனில் நடைபெற்றது அதனால் அவர் அதற்கு செல்வதற்காகத்தான் அனுமதி பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல ஏப்ரல் முதல்வாரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் கலந்துக்கொள்வதற்காக தன்னுடைய உடல் நலத்தை சரி செய்து கொள்ள வேண்டும் என்று சுரேஷ் சக்கரவர்த்தி இந்த முறையும் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

  பிக் பாஸின் இறுதி வாரத்தில் பழைய போட்டியாளர்கள் அனைவரும் ஃபைனலிஸ்ட்டுகளை பார்ப்பதற்காக வருவார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil

  அடுத்த செய்தி