Home /News /entertainment /

சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

பிக் பாஸ் சீசன் 6ல் ராஜலட்சுமியை போட்டியாளராக களம் இருக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் ராஜலட்சுமியை பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    கிராமிய பாடல்கள் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆன செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி இப்போது வெள்ளித்திரை பிரபலங்களும் கூட. இருவரும் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடி வருகின்றன. இதுத்தவிர தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இன்ஸ்டா பக்கத்திலும் அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கின்றனர். இந்நிலையில், செந்தில் கணேஷின் மனைவி ராஜலட்சுமியை பிக் பாஸில் களம் இறக்க விஜய் டிவி குழு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கண்ணீருடன் சேர்ந்த சத்யா - வருண்.. வெறுப்பில் நிற்கும் ஸ்ருதி!

    ஏற்கெனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இருவரும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்துள்ளனர். இதுப்போக சோஷியல் மீடியாவிலும் இவர்களுக்கு செம்ம ரீச் உள்ளது. இந்நிலையில் எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்கர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த லிஸ்டில் ரம்யா, வேல் முருகன், சின்னப்பொண்ணு, சுசித்ரா ஆகியோர் பிக் பாஸின் வெவ்வேறு சீசனில் கலந்து கொண்டனர். அந்த வகையில் விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6ல் ராஜலட்சுமியை போட்டியாளராக களம்  இருக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

    சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்தில்  டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது அனைவரும் அறிந்த ஒன்று. தங்களது திறமையால் மக்கள் மத்தியில் பாராட்டு, பேரும், புகழும் சம்பாதித்து இருக்கும் இவர்கள் மறுபடியும் டெலிவிஷன் நிகழ்சியில் பங்கேற்க நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள் என ரசிகரக்ள் நம்புகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எந்த தகவலையும் உறுதி செய்ய முடியாது. இதுப்போல் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி கடைசியில் அவை வதந்தியாக மாறி இருக்கிறது..




    அதுப்போல் ராஜலட்சுமி குறித்து பரவும் இந்த தகவல் உண்மையா? வதந்தியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Television, Vijay tv

    அடுத்த செய்தி