Home /News /entertainment /

என்ன சிம்ரன் இதெல்லாம்? சூப்பர் சிங்கர் பிரபலத்தின் ஃபோட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

என்ன சிம்ரன் இதெல்லாம்? சூப்பர் சிங்கர் பிரபலத்தின் ஃபோட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் பிரகதி

சூப்பர் சிங்கர் பிரகதி

சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு பிரகதி சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.

    ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது, இந்த சேனல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசனை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு எந்தளவு வரவேற்பு இருக்கிறதோ, இந்த ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் சீனியர், சாம்பியன் என்று பல சீசன்களை நடத்தி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டவர் தான் அமெரிக்காவை சேர்ந்த தமிழர் பிரகதி குருபிரசாத். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்கேற்று ரன்னர் அப்பாக வந்தார்.

    அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறு வயதில் இருந்தே பாட்டு பாட கற்று கொண்டு விஜய் டிவியில் கலந்து கொண்டு பிரபலமானார். சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக கிடைத்த புகழைக் கொண்டு அவர் சினிமாவிலும் பாடத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் இவர் பாடி வருகிறார் பிரகதி. மேலும் அவர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஒரு காதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

    அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு எந்த படங்களிலும் கமிட்டாகாமல் மீண்டும் தனது சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து தான் தற்போது அவர் பாடல்களையும் பாடி இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறார். இவர் Independent ஆல்பம் பாடலைகளையும் நிறைய பாடியிருக்கிறார். மேலும் அவர் பாடி வெளியிட்ட சில ஆல்பம் பாடல்களுக்கும் youtubeல் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதையும் படிங்க.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அமீர் கேட்டார்.. பிக் பாஸ் 5ல் மறைக்கப்பட்ட உண்மைகளை போட்டுடைத்த பாவ்னி!

    இதுதவிர எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பிரகத்திக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் வித்தியாசமான லுக்குகளில் போட்டோக்களை பதிவிட்டு வருவார். அதில் சில புகைப்படங்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தாலும், சில போட்டோகளுக்கு அதிகபடியான விமர்சனங்களை பெறுவது வழக்கம். முன்னதாக இவர் மிகவும் கவர்ச்சியான பிகினி உடையில் படகில் இருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)






    அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிகினி புகைப்படம் ஆச்சர்யத்தை அளித்தது. மேலும் பலரும் அந்த பதிவுக்கு பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் Phony ஹேர் ஸ்டைல் வைத்து வெளியிட்ட மற்றொரு போட்டோ பதிவின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களால் கேலிக்கு உள்ளானார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர். ஆம், உள்ளாடை தெரியும் படி கருப்பு உடை அணிந்தபடி அவர் எடுத்திருக்கும் போட்டோ ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது அவரது கவர்ச்சி. இதை பார்த்த ரசிகர்களில் சிலர் அழகாக இருக்கிறீர்கள் என பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஏன் இப்படி என்பது போல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இவருடைய ஹாட் கிளாமரஸ் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Programme, Vijay tv

    அடுத்த செய்தி