Home /News /entertainment /

பிரச்சனை எல்லாம் ஓவர்.. மீண்டும் சூப்பர் சிங்கரில் பிரியங்கா என்ட்ரி!

பிரச்சனை எல்லாம் ஓவர்.. மீண்டும் சூப்பர் சிங்கரில் பிரியங்கா என்ட்ரி!

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

, பிரியங்கா பிக் பாஸ் நண்பர்கள் பாவ்னி, அபிஷேக், மதுமிதா உடன் சேர்ந்து ஐதராபாத் சென்று இருந்தார்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தொடர்பாக இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா.

    பல ஆண்டுகளாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கரும் ஒன்று. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் இன்று வெள்ளித்திரையை கலக்கி கொண்டிருக்கும் பாடகர்களாக உள்ளனர். தொடர்ந்து 8 சீசன்களை கடந்து அதே பிரம்மாண்டத்துடன் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரியாலிட்டி ஷோ என்றாலே அதை காமெடியாக தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்போது டிவி சேனல்கள் உள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமில்லை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடி ட்ராக்கில் தான் செல்லும். இதை திறம்பட கையாளும் திறமை ஆங்கர்களிடம் தான் உள்ளது.

    அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்யக்கூடியவர் ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே. தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டு ஆடியன்ஸை சிரிக்க வைக்கும் நாட்டி கேர்ளான பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பலம் என்றே கூறலாம். தொடர்ந்து 5 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இருவருடன் மா.கா பா ஆனந்தும் சேர்ந்து கொள்வார். சின்னத்திரையில் இவர்களின் காம்போ சூப்பர் டூப்பர் ஹிட். இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார்கள். ஆங்கர் பிரியங்கா என்ற பெயர் மாறி சூப்பர் சிங்கர் பிரியங்கா என்றே மாறி போனது.

    இதையும் படிங்க.. epfo : உங்கள் குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் வரை கிடைக்கும்.. பிஎஃப் கணக்கில் இதை செய்தால் மட்டும் போதும்!

    இப்படி இருக்கையில் பிரியங்கா, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அந்த நேரத்தில் மா.கா.பாவுடன் சேர்ந்து மைனா நந்தினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இருந்தாலும் பலரும் பிரியங்காவை மிஸ் செய்தனர். சரியாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து 2 வாரங்கள் கழித்து பிரியங்கா மீண்டும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்தார். அதை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார்.

    இதையும் படிங்க.. சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!

    அப்போது தான் இணையத்தில் பிரியங்கா குறித்த தகவல் வேகமாக பரவியது. அதாவது, பிரியங்கா பிக் பாஸ் நண்பர்கள் பாவ்னி, அபிஷேக், மதுமிதா உடன் சேர்ந்து ஐதராபாத் சென்று இருந்தார். வேலை நேரத்தில் இப்படி பொறுப்பு இல்லாமல் பிரியங்கா சென்றது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குழுவுக்கும் விஜய் டிவிக்கும் கோபத்தை ஏற்படுத்தி விட்டதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வர தொடங்கின. அதே போல் இனிமேல் சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லை, மைனா தான் தொடர்வார் என்ற சர்ச்சைகளும் வெடித்தன. இதற்கு பிரியங்காவும் மெளனம் கலைக்காமல் இருந்தார்.



    இப்படி இருக்கையில் தற்போது வெளியாகியுள்ள சூப்பர் சிங்கர் புரமோவில் பிரியங்கா தான் ஆங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவும் வருகை தந்துள்ளார். அதே நேரம் சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி என்னவென்றால் இந்த முறை நிகழ்ச்சியில் மா.கா.பா மிஸ்ஸிங். குக் வித் கோமாளி குரேஷி பிரியங்காவுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி