ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்.. டான்ஸ் vs டான்ஸ் ஷோவில் மாபெரும் நடன கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்.. டான்ஸ் vs டான்ஸ் ஷோவில் மாபெரும் நடன கொண்டாட்டம்!

கலர்ஸ் தமிழ் டான்ஸ் vs டான்ஸ்

கலர்ஸ் தமிழ் டான்ஸ் vs டான்ஸ்

டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 நிகழ்வில் இந்த வார ரஜினி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் மகத்துவத்தை போட்டியாளர்கள் நடனத்தின் மூலம் வெளிப்படுத்துவதை கண்டுமகிழலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வாரம் உங்களுக்கு டான்ஸையும், ஸ்டைலையும் சேர்த்து வழங்குகிறது. டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 நிகழ்வில் இந்த வார ரஜினி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் மகத்துவத்தை போட்டியாளர்கள் நடனத்தின் மூலம் வெளிப்படுத்துவதை கண்டுமகிழலாம்.

பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குநர் பிருந்தா நடுவர்களாக பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை நடன மற்றும் இசையோடு சேர்ந்து ஸ்டைலாக போட்டியாளர்கள் கொண்டாடி மகிழ்வதை 2021 டிசம்பர் 11 மற்றும் 12 தினங்களில் கண்டு ரசிக்கலாம்.

இந்த வார எபிசோடில் புதிய தொகுப்பாளியாக தமிழக மக்கள் அனைவரும் அறிந்த பாவனா பாலகிருஷ்ணன் இணைகிறார் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் சிவாவை வரவேற்கிறார். இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக பேட்டை திரைப்படத்திலிருந்து “மாஸ் மரணம்” திரைப்பாடலுக்கு நடிகர் ஷாம் குழுவைச் சேர்ந்த அய்சு-அல்ஹேனா நடனமாடுகின்றனர், இதனைத் தொடர்ந்து நடன அமைப்பாளரின் ஶ்ரீதர் குழுவைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஆகியோர் அண்ணாமலை திரைப்படத்திலிருந்து “வந்தேண்டா பால் காரன்” பாடலுக்கும் மற்றும் அதைத் தொடர்ந்து “கொண்டையில் தாழம்பூ” பாடலுக்கு நடிகை குஷ்புவுடன் சேர்ந்து சாண்டியும் நந்திகாவும் நடனமாடி கலக்கவிருக்கின்றனர்.

இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பங்கேற்கிறார். நடிகை அபிராமியின் குழுவைச் சேர்ந்த அபிராஜ் மற்றும் அஞ்சனா ஆகியோர் படையப்பா திரைப்படத்திலிருந்து "சுத்தி சுத்தி வந்தீக" பாடலுக்கும், நடிகை இனியாவின் குழுவைச் சேர்ந்த பிருத்வி மற்றும் தியன் ஆகியோர் பாஷா திரைப்படத்திலிருந்து "நான் ஆட்டோகாரன்" பாடலுக்கும் நடனமாடவிருக்கின்றனர்.

தொகுப்பாளினி பாவனா கிளாசிக்கல் நடனம் ஆடுவதையும், தங்க மகனின் "பூ மாலை" பாடலுக்கு நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பூ ஆகியோர் நடனம் ஆடுவதையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.சிறப்பான நடனங்கள், கலகலப்பூட்டும் நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய டான்ஸ் vs. டான்ஸ் சீசன் 2, இந்த வார இறுதி நாட்களில் தவறவிடாமல் கண்டு மகிழ்வதற்கான நிகழ்ச்சியாக இருப்பது நிச்சயம்.

பூர்ணிமா பாக்யராஜ்

அற்புதமான இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ டிசம்பர் 11, 12 ஆம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிறன்று இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT – ஐ டியூன் செய்யலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்