• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணீரில் சூப்பர் சிங்கர் மேடை.. SPB பாடலை பாடிய சித்ரா, பரத்!

கண்ணீரில் சூப்பர் சிங்கர் மேடை.. SPB பாடலை பாடிய சித்ரா, பரத்!

SPB பாடலை பாடிய சித்ரா

SPB பாடலை பாடிய சித்ரா

ஒரு கட்டத்தில் தன்னுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.

  • Share this:
    விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சின்னக்குயில் சித்ரா - பரத் ஆகியோர் பாடும் பாட்டைக் கேட்டு எஸ்.பி.பி சரண் கண்கலங்கும் புரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். சூப்ப சிங்கர் ஜூனியர் சீசன்களுக்கு நடுவராக இருந்த ’சின்னக்குயில்’ சித்ரா, இந்த ஆண்டில் பாடகியாக திரைத்துறையில் 40 ஆண்டுகளை கடந்திருக்கிறார். அவரை பாராட்டி கவுரவிக்கும் விதமாக சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் இந்த வாரம் சித்ராவுக்கு tribute கொடுக்கும் ஸ்பெஷல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனால், நிகழ்ச்சிக்கு வருகை தரும் பாடகி சித்ரா, போட்டியாளர்களுடன் மேடையில் நின்று தான் பாடிய பாடல்களை பாடுகிறார். போட்டியாளராக இருக்கும் பரத்துடன் இணைந்து ’யாருக்குள் இங்கு யாரோ’ என்ற பாடலை பாடும்போது, அந்தப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் எஸ்.பி.பி சரண், ஒரு கட்டத்தில் தன்னுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், அழுகிறார். ஏனென்றால், திரைப்படத்தில் ஒரிஜினலாக இந்தப் பாடலை ஜாம்பவான் எஸ்.பி.பி பாடியிருந்தார். அவர் பாடிய பாடலை அச்சு பிசகாமல் சித்ரா மற்றும் பரத் பாடியதும், தந்தையின் நினைவுகளை நினைத்து கண்ணீர் விடுகிறார்.

    also read ...பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

    பரத் மற்றும் சித்ரா பாடியதும் மேடைக்கும் வரும் எஸ்.பி.பி சரண், இருவரையும் மனதார பாராட்டுகிறார். பரத் பாடும்போது, தந்தையின் நினைவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்த அவர், அவருடைய நினைவுகள் கண்முன்னே ஒடிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் சரண் குறிப்பிட்டார். அப்போது, பாடகி சித்ராவும், நீங்கள் மட்டும் இல்லை சரண், நாம் அனைவருமே ரொம்ப மிஸ் செய்கிறோம் எனத் தெரிவித்தார்.



    விஜய் டிவி வெளியிட்டுள்ள இந்தப் புரோமோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கரில் ரசிகர்கள் இந்த நிகழ்வைக் காணலாம். எஞ்சியிருக்கும் போட்டியாளர்கள் அனைவருடனும் இணைந்து சித்ரா பாடுகிறார். அப்போது, போடியாளர்கள் சில சர்பிரைஸான கிஃப்டுகளையும் சித்ராவுக்கு கொடுக்கின்றனர். தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் சில வாரங்களில் வைல்டு கார்டு ரவுண்ட் ஆரம்பமாக உள்ளது. இதில், ஏற்கனவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேறியவர்கள் பாட உள்ளனர். அந்த ரவுண்டு முடிந்தவுடன் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்? என்பது தெரியவரும். இறுதிப்போட்டிக்குள் நுழைய போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. அதற்கேற்ப நடுவர்களும் சிறிய மிஸ்டேக்கைகூட நோட் செய்வதால் வரும் வாரங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: