• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மக்களின் உள்ளம் கவர்ந்த போட்டியாளர்.. சூப்பர் சிங்கர் வைலட் கார்டில் வென்றவர் இவரே!

மக்களின் உள்ளம் கவர்ந்த போட்டியாளர்.. சூப்பர் சிங்கர் வைலட் கார்டில் வென்றவர் இவரே!

சூப்பர் சிங்கர் 8

சூப்பர் சிங்கர் 8

ஸ்ரீதர் சேனாவை வெளியேற்றியது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடிக்க நடுவர் பென்னி வரை அந்த சர்ச்சையில் சிக்கும்படி ஆகியது

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் 8ல் மக்களின் உள்ளம் கவர்ந்த போட்டியாளர், ரசிகர்களின் லட்சக்கணக்கான ஓட்டிங் மூலம் இறுதி போட்டிக்கு தகுதியாகியுள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்த அறிமுகம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தேவைப்படாது. எத்தனை சீசன் தொடங்கினாலும் இந்த நிகழ்ச்சியை அடித்து கொள்ள முடியாது. அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெயர் போன நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 8 ஆவது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பமே மிகப் பெரிய வெற்றி. வழக்கம் போல் மா.பா.க ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள். ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாத போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவருமே நிகழ்ச்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டனர். அதிலும் மானஸி, ஸ்ரீதர் சேனா, முத்து சிற்பி, அபிலாஷ் போன்றவர்களுக்கு பயங்கர ஃபேன்ஸ் பட்டாளம்.

    இடையில் கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சின்ன குயில் சித்ரா, ஹரிகரன், எஸ்.பி சரண், சங்கர் மகா தேவன் என இசை ஜாம்பவான்கள் பலரும் வந்து போட்டியாளர்களை வாழ்த்தி அவர்களுக்கு நடுவர்களாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 இறுதி போட்டியை எட்டியுள்ளது. ஏற்கெனவே அணு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் என 4 பேர் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வாகிவிட்டார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர்களுடன் இறுதி போட்டியில் சேர்ந்து பாட போகும் ஐந்தாவது போட்டியாளர் யார் என்ற கேள்வி தான் கடந்த வாரம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. கடந்த வாரம் இதுவரை போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய 10 போட்டியாளர்கள் வைலட் கார்டு சுற்றில் பாடினர். அவர்களில் யாராவது ஒருவரை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே ஸ்ரீதர் சேனாவை வெளியேற்றியது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடிக்க நடுவர் பென்னி வரை அந்த சர்ச்சையில் சிக்கும்படி ஆகியது. அந்த அளவுக்கு ஸ்ரீதர் சேனாவுக்கு பயங்கர ஃபேன்ஸ்.



    இந்நிலையில் வைலட் கார்டு சுற்றின் முடிவுகள் இன்றைய நிகழ்ச்சியில் அறிவிக்கப்படவுள்ளன. மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று ஸ்ரீதர்சேனா இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.அதுமட்டுமில்லை ரசிகர்களுக்கு குட்டி சர்பிரைஸூம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, நடுவர்களின் தேர்வுப்படி மானஸியும் இறுதி போட்டிக்கு 6 ஆவது போட்டியாளராக உள் நுழைகிறார். மொத்தத்தில் திறமை வாய்ந்த 2 கலைஞர்களும் இறுதி போட்டியில் நுழைந்து ரசிகர்களை மகிழ்விக்க போகிறார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் இன்றைய நிகழ்சியில் ஒளிப்பரப்பாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: