Home /News /entertainment /

முன்னாள் அமைச்சர் தொடங்கி கலெக்டர் வரை.. களைக்கட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலட்சுமி வீட்டு விசேஷம்!

முன்னாள் அமைச்சர் தொடங்கி கலெக்டர் வரை.. களைக்கட்டிய சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலட்சுமி வீட்டு விசேஷம்!

செந்தில் - ராஜலட்சுமி

செந்தில் - ராஜலட்சுமி

செந்தில் - ராஜலட்சுமி வீட்டில் புதுமனை புகுவிழா மற்றும் அவர்களின் 2 குழந்தைகளுக்கும் காதணி விழா நடைப்பெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமியின் இல்ல விழாவுக்கு முன்னாள் அமைச்சர் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் நேரில் சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது செந்தில் ராஜலட்சுமி யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

    மண் மனம் மாறாத நாட்டுப்புற பாடல் கலைஞர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வாழ்க்கையை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தலைகீழாக மாற்றியது என்றால் அது மிகையல்ல. இன்று அவர்கள் அடைந்திருக்கும் உயரத்தை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆன இவர்கள்  நாட்டுப்புற கலைஞர்களின் திறமைகள், அவர்களுக்கான வாய்ப்புகள் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியில் பதிவு செய்தனர். கணவன் - மனைவி இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  கடைசியில் அந்த சீசனில் வெற்றியாளராக செந்தில் கணேஷ் அறிவிக்கப்பட்டார்.

    ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்களும் தங்களது வெற்றியாக அதை கொண்டாடினார்கள். அதன் பின்பு சினிமாவிலும் இருவருக்கும் வாய்ப்புகள் குவிய தொடங்கின. காப்பான், சார்லி சாப்ளின் 2, சூரரை போற்று போன்ற படங்களில் செந்தில் கணேஷ் பாடிய பாடல் மிகப் பெரிய அளவில் ரீச்சை பெற்றது. அதே போல் ராஜலட்சுமி புஷ்பா படத்தில் பாடிய சாமி பாடல் சென்சேஷனல் ஹிட்டாக அமைந்தது. சினிமா தாண்டி இருவரும் வழக்கம் போல் நாட்டுப்புற இசை கச்சேரிகள், கோயில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பாடி வருகின்றனர்.



    இந்நிலையில் கடந்த வாரம், செந்தில் - ராஜலட்சுமி வீட்டில் புதுமனை புகுவிழா மற்றும் அவர்களின் 2 குழந்தைகளுக்கும் காதணி விழா நடைப்பெற்றது. திருவிழா போல் பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    இதுத்தவிர மூத்த நாட்டுப்புற இசை கலைஞர்கள் பலரும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேரில் சென்று விழாவை சிறப்பித்து இருக்கின்றனர். இதுக் குறித்த புகைப்படங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் செந்தில் ராஜலட்சுமி யூடியூப் சேனலில் தற்போது இதன் வீடியோவும் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Instagram, Vijay tv, Youtube

    அடுத்த செய்தி