ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாய்ப்பு கொடுத்தவரை மறக்காத செந்தில் - ராஜலட்சுமி..புது வீட்டில் யார் கையால் விளக்கு ஏற்றினார்கள் தெரியுமா?

வாய்ப்பு கொடுத்தவரை மறக்காத செந்தில் - ராஜலட்சுமி..புது வீட்டில் யார் கையால் விளக்கு ஏற்றினார்கள் தெரியுமா?

செந்தில் - ராஜலட்சுமி

செந்தில் - ராஜலட்சுமி

. செந்தில் - ராஜலட்சுமியின்  இந்த மரியாதை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

   வளர்த்து விட்டவரை  மறக்காத செந்தில் - ராஜலட்சுமி ஜோடி சமீபத்தில் கட்டிய புது வீட்டுக்கு அவரையே அழைத்து குத்து விளக்கு ஏற்ற வைத்துள்ளனர். அவர் யார் தெரியுமா? 

  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆன செந்தில் - ராஜலட்சுமி பற்றி ரசிகர்களுக்கு அறிமுகம் தேவைபடாது.சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராம இசை, மக்கள் இசை, திருவிழா கச்சேரி போன்ற இடங்களில் பாடி வந்தவர்களுக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு வழங்கியது. வாய்ப்பை சுதாகரித்துக் கொண்ட இருவரும் தங்களிடம் இருக்கும் மொத்த திறமைகளையும் வெளியே காட்டி பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனர். அதுமட்டுமில்லை ஃபைனல்ஸ் வரை இருவரும் செல்ல, டைட்டிலை வென்றார் செந்தில் கணேஷ்.

  வெண்பா கல்யாணம்.. பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட்! கிளைமாக்ஸை நோக்கி நகரும் பாரதி கண்ணம்மா

  பின்பு இருவருக்கும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. பல படங்களில் தொடர்ந்து பாட தொடங்கினர். இவர்களின் குரலில் வெளிவந்த எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஆனாலும் இருவரும் கிராமிய பாடல்களை விடவில்லை. தொடர்ந்து அதிலும் கவனம் செலுத்தி வெற லெவலுக்கு ரீச் ஆகியுள்ளனர்.

  பூஜை அறை இல்லை.. ஹாலில் அம்மாவின் சிலை! ஆர்த்தி - கணேஷ்கர் வீட்டை பார்த்து இருக்கீங்களா?

  இந்நிலையில் இத்தனை வருட உழைப்பாக இருவரும் புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக வீடு கட்டி குடிபுகுந்தனர். இவர்களின் புதுமனை புது விழா கடந்த மாதம் பிரம்மாண்டமாக அரங்கேறியது . அதனை தொடர்ந்து இவர்களின் ஹோம் டூர் வீடியோவும் இணையத்தில் வைரலானது. வீடா? மாளிகையா? என கேட்கும் அளவுக்கு அத்தனை விஷயத்தையும் பார்த்து பார்த்து அந்த வீட்டில் செதுக்கி இருந்தனர் இருவரும். இந்நிலையில் தற்போது இவர்களின் புதுமனை புதுவிழாவின் மற்றொரு வீடியோவும் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

  ' isDesktop="true" id="822483" youtubeid="yS_i77M-its" category="television">

  அதாவது தங்களை புகழின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருவரும் மறக்கவில்லை. அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ரவூஃபாவை அழைத்து அவர் கையால் குத்து விளக்கு ஏற்ற வைத்து இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். செந்தில் - ராஜலட்சுமியின்  இந்த மரியாதை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் இருவரையும் மனதார பாராட்டி வாழ்த்தியுள்ளனர். அதுமட்டுமில்லை செந்தில் - ராஜலட்சுமியின் இல்ல விழாவுக்கு குக் வித் கோமாளி இயக்குனரும்  சென்று இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Vijay tv, Youtube