• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பெற்றோரை நினைத்து கண்கலங்கிய ஷாம் விஷால்.. ஒரு வழியாக ஆசை நிறைவேறியது!

பெற்றோரை நினைத்து கண்கலங்கிய ஷாம் விஷால்.. ஒரு வழியாக ஆசை நிறைவேறியது!

சூப்பர் சிங்கர் ஷாம் விஷால்

சூப்பர் சிங்கர் ஷாம் விஷால்

இதேபோல் இன்னும் பல மகிழ்ச்சியான தருணங்கள் ஷாம் விஷாலுக்கு அமைய வேண்டும்

 • Share this:
  சூப்பர் சிங்கர் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாம் விஷால், முதன்முறையாக குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஷோ சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட்டான ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் போட்டிக் களம் நாளுக்கு நாள் கடுமையானதாக மாறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாம் விஷால், அந்த சீசனுக்குப் பிறகு இன்னும் பிஸியாகிவிட்டார். வெள்ளித்திரையிலும் கால்பதித்து அசத்தினார்.

  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை, தெலுங்கில் பாடியவர் ஷாம் விஷால். இதன் பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் இறுதிப் போட்டி வரை ஷாம் விஷால் முன்னேறினாலும் வெற்றி பெறவில்லை. ஆனால், அவருடைய பர்ஃபாமென்சை பலரும் பாராட்டினர். பாட்டுப் பாடியே பெண்களின் மனதை கொள்ளை கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஷாம் விஷாலின் அப்ரோச், முரட்டு சிங்கிள் நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. அவ்வப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகிறார். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்த ஷாம் விஷால், என்னடி மாயாவி பாடலை தத்ரூபமாக பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். சித் ஸ்ரீராம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோதும் இந்தப் பாடலை பாடிய அவர், முரட்டு சிங்கிள் ஷோவிலும் இதே பாடலை பாடி உள்ளத்தை கொள்ளை கொண்டார். இதனால், சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Sam Vishal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samvishal0928)


  அண்மையில் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும்போது, தன் குடும்பத்தை 6 மாதங்களுக்கும் மேலாக பார்க்கவில்லை என கண்கலங்கியவாறு கூறினார். விரைவில் அவர்களை சந்திக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ஷாம் விஷாலுடன் பங்கேற்றிருந்த சூப்பர் சிங்கர் நண்பர்கள் அவரை தேற்றினர்.

  இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த வீட்டிற்கு சென்ற ஷாம் விஷால், குடும்பத்தினரைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். அப்பா, அம்மா, தங்கை என அனைவருடனும் மகிழ்ச்சியாக அமர்ந்து, புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிரித்த முகத்துடன் புகைப்படத்தில் இருக்கும் ஷாம் விஷாலையும், குடும்பத்தினரையும் பார்த்து நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதேபோல் இன்னும் பல மகிழ்ச்சியான தருணங்கள் ஷாம் விஷாலுக்கு அமைய வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: