சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகி இருந்த நிலையில், சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்திலும் டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். இந்த ஜோடியின் சொந்த பாடலான "சின்ன மச்சான்" பாடலை சார்லி சாப்ளின் 2-வில் இருவரும் பாடி அசத்த அதுவும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற "அய்யா சாமி" பாடலை ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து கணவன் - மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றனர்.
தற்போது தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர். செந்திலும் விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் இரண்டு நட்சத்திர ஹீரோக்களுக்கு பாடியுள்ளார். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை. இப்படி சினிமா கெரியரில் பிஸியாக இருக்கும் இருவரும், தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் குறித்த அப்டேட்டுகள், குடும்பத்தில் நடக்கு நிகழ்வுகள் ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இதை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் யூடியூப்பில் இருக்கிறது.
இந்நிலையில், இந்த யூடியூப் சேனலில் ராஜலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பார்ப்பவர்களையும் வாவ் சொல்ல வைக்கிறது. அதாவது ஷூட்டிங், ட்ராவலிங்கில் பிஸியாக இருக்கும் ராஜலட்சுமி தன்னை மெருகேற்றி கொள்ள பார்லர் செல்கிறார். அங்கு ஃபேஷியல், மெனிக்யூர் , பெடிக்யூர், ஹார்வாஷ் செய்து சுமார் 2 மணி நேரம் செலவிடுகிறார். எல்லாம் முடித்த பின்பு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி ஜொலிக்கிறார்.
இந்த மேக்கப்புக்கு பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது. செந்தில் -ராஜலட்சுமி தங்களது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்திற்கு தான் அந்த மேக்கப்பா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனது திருமண நாளன்று திருமண புகைப்படங்களையும் ராஜலட்சுமி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா? இது எனவும் ஆச்சரியத்துடன் கேட்டு வருக்ன்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.