விஜய் டிவி பிரியங்கா வீட்டில் விசேஷம். இதுக் குறித்த தகவலை அவரே புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை டாப் ஆங்கர் லிஸ்டில் இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் பிரியங்கா. சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான இவர், ஆங்கர் ஆக வேண்டும் என்ற ஆசையின் மூலம் சன் டிவியில் நுழைந்தார். பின்பு விஜய் டிவி பக்கம் சென்றார். ஒல்லி, பெல்லி நிகழ்ச்சி பிரியங்காவுக்கு நல்ல ரீச்சை வாங்கி தந்தது. அடுத்தடுத்து முக்கியமான நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்வதர் சூப்பர் சிங்கர் ஷோவை கையில் எடுத்த பின்பு விஜய் டிவியின் முன்னணி ஆங்கரானார்.
இதையும் படிங்க.. என் வாழ்க்கையில் என்ன தான் நடக்குது... கோபியிடம் கதறும் பாக்கியா!
சமீபத்தில் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியை ராஜூ ஜெயமோகனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸில் பிரியங்காவின் பயணத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ரன்னர் அப் இடத்தை பிடித்தாலும் அவர் பல நெகடிவ் விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார். பிரியங்கா தன்னுடைய மிகப் பெரிய பலமாக அடிக்கடி கூறுவது ரசிகர்கள் அதன்பின்பு அவரின் அம்மா மற்றும் தம்பி.
இதையும் படிங்க.. லோகேஷ் கனகராஜும் பழைய பாடல்களும்!
லாக்டவுனில் தம்பியின் திருமணத்தை யூடியூப்பில் லைவாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து இருந்தார். பிக் பாஸ் வீட்டுக்கு ஒருமுறை அவரது தம்பியும் வந்து இருந்தார். இந்நிலையில் அவரின் தம்பிக்கு குழந்தை பிறக்க போகிறது. அந்த விஷயத்தை செம்ம க்யூட்டாக பிரியங்கா இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.
வளைக்காப்பு நடத்தப்பட்ட அவரின் தம்பி மனைவின் வயிற்றில் காதை வைத்துக் கொண்டு பிரியங்கா கொடுத்திருக்கும் போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தான் அத்தையாக போவதை பெரும் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து இருக்கிறார் பிரியங்கா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.