Home /News /entertainment /

அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

இந்த பாடலுக்கான புரமோஷன் வீடியோவில் பிரியங்காவே நடித்தும் இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  சூப்பர் சிங்கர் பிரியங்காவை வைத்து பிசாசு 2 படத்திற்கான சாங் புரமோஷன் வேலையை முடித்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இந்த பாடலை பாடியது மட்டுமில்லாமல் பிரியங்காவே நடித்தும் கொடுத்துள்ளார்.

  சூப்பர் சிங்கரில் கிடைத்த ’இசை முத்து’ பிரியங்காவின் குரலுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு தனது ரம்மியமான குரலால் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் இன்று பின்னணி பாடகியாக வளர்ந்து நிற்கிறார். பிரியங்காவின் தேன் குரலை கேட்டால் நடுவர்கள் மட்டுமில்லை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் கூட மெய் மறந்து போய்விடுவார்கள். பெரிய பெரிய இசை ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட பிரியங்கா டாக்டர் படிப்பை முடித்து விட்டார். இருப்பினும் இசை மீது அவர் கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து இசை தொடர்பான வேலைகளை செய்து வருகிறார்.  கிறிஸ்துவ மத போதகராக மாறிய 90களின் கனவுக்கன்னி நடிகை மோகினி!

  இசை ஆல்பம் பாடி வெளியிடுகிறார். வெளிநாடு இசை கச்சேரியில் கலந்து கொள்கிறார். படங்களிலும் பாடல் பாடி வருகிறார். அந்த வகையில் கூடிய விரைவில் ரிலீஸாக உள்ள மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு 2 படத்தில் நெஞ்சே கேளு என்ற பாடலை பிரியங்கா பாடியுள்ளார். இந்த பாடலை பாடியது மட்டுமில்லை இந்த பாடலுக்கான புரமோஷன் வீடியோவில் பிரியங்காவே நடித்தும் இருக்கிறார்.

  கடந்த வியாழக்கிமை சென்னை ecr கடற்கரையில் இதற்கான ஷூட்டிங் நடந்து இருக்கிறது. இதில் சூப்பர் சிங்கர் பிரியங்கா மற்றும் படத்தின் ஹீரோயின் ஆண்ட்ரியாவும் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள். வழக்கம் போல் மிஷ்கினின் கலை வண்னத்தில் பாடல் சூப்பராக படமாக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. பாடல் பாடிய அனுபவம் குறித்து பேசியுள்ள பிரியங்கா, “ இந்த பாடல் ஒலிக்கப்படும் சூழ்நிலையை எனக்கு மிஷ்கின் சார் மிகவும் நுட்பமாக புரிய வைத்தார். பாடலின் ட்யூனையும் உணர்வையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

  உச்சக்கட்ட பரபரப்பில் மெளன ராகம்.. காதம்பரியை கைது செய்யும் போலீஸ்!

  ரெக்கார்டிங் செஷன் மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொரு நல்ல டேக்கிற்குப் பிறகும் என்னை பாராட்டினார்கள். பின்னர் தெலுங்கு பதிப்பையும் பதிவு செய்தோம்.” என்று கூறியுள்ளார். படத்திற்காக  பாடலை பாடிய பிரியங்காவும் இடையில் இடையில் தோன்றி லிரிக்ஸை பாடுவது போல் புரமோஷன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இதுப்போன்ற புரமோஷன் வீடியோவில் பிரியங்கா நடித்து இருப்பது இதுவே முதல் முறை . கடற்கரையில் மிகவும் அழகாக இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

  சின்னத்திரை நயன்தாரா ’வாணி போஜன்’ எடுத்த முக்கிய முடிவு!

  இதற்கு முன்பு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோக்கள் மற்றும் யூடியூப் கவர் பாடல்களுக்காக பிரியங்கா நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் சற்றும் பயந்துடன் இருந்தேன் பின்பு மிஷ்கின் சார் என்னை தைரியமாக நடிக்க வைத்தார் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Director mysskin, Vijay tv

  அடுத்த செய்தி