Home /News /entertainment /

ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

பிரியங்கா உண்மையில் ரூ. 2 லட்சம் எபிசோடுக்கு வாங்குகிறாரா?

    விஜய் டிவி நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ அதைவிட ஒருபடி மேலே விஜய் டிவி ஆங்கர்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். அதிலும் டிடியில் தொடங்கி ரம்யா, பாவ்னி, டிடி அக்கா திவ்யதர்ஷினி, திவ்யா, பிரியா பாவ்னி சங்கர் என விஜய் டிவி நிகழ்ச்சி மேடைகள், பல பெண் ஆங்கர்களை பார்த்துள்ளனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக மொத்தமாக குத்தகைக்கு எடுத்து ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வரும் வி.ஜே.பிரியங்கா இதுவரை பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்துள்ளார்.

    அவரை நம்பியே ஒரு முழு ஷோவையும் ஒப்படைக்கும் அளவுக்கு பிரியங்கா தனது பெயரை நிலைநாட்டிக் கொண்டார். ஆங்கரிங் பிளஸ் காமெடி தான் பிரியங்கா ஸ்டைல். அவரை அவரே கலாய்த்துக் கொள்வார், மற்றவர்கள் கலாய்த்தாலும் அதை கன்டெண்ட் ஆக்கிவிடுவார். சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் ஆங்கரிங் முகம் மட்டுமில்லை மற்றொரு முகத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு காட்டியது. சிலருக்கு அந்த பிரியங்காவை பிடித்து இருந்தது, சிலர் நெகடிவ் கமெண்டுகளையும் பதிவு செய்தனர்.

    பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!

    இப்படி இருக்கையில், சமீபத்தில் கூட பிரியங்காவுக்கு விஜய் டிவி பெஸ்ட் ஆங்கர் அவார்டு கொடுத்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரியங்கா உடல் எடை குறைத்து சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட்டும் படு வைரலானது. இப்படி இருக்கையில், பிரியங்கா பற்றி மற்றொரு தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது வழக்கமாக பரவும் தகவல் தான். அதாவது வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களின் சம்பள விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும். இதுக் குறித்த உண்மை நிலவரம் தெரியாது. ஆனால் அந்த தகவல் மட்டும் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகும். அப்படி தான் சூப்பர் சிங்கர் பிரியங்காவின் சம்பளம் குறித்த தகவலும் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.




    ஒரு எபிசோடுக்கு பிரியங்கா 2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இதை கேட்டதும் ரசிகர்கள் வாயடைத்து போயியுள்ளனர். சிலர், டேக்ஸ் எல்லா பிடித்து அதில் பாதி பணம் தான் பிரியங்காவுக்கு செல்லும் எனவும் கூறியுள்ளனர். பிரியங்கா உண்மையில் ரூ. 2 லட்சம் எபிசோடுக்கு வாங்குகிறாரா? என்ற  செய்தியின் உண்மை அவரே சொன்னால் மட்டும் எல்லோருக்கும் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி