Home /News /entertainment /

சூப்பர் சிங்கர் பிரியங்கா மீது கடும் கோபத்தில் விஜய் டிவி? அப்படி என்ன நடந்தது?

சூப்பர் சிங்கர் பிரியங்கா மீது கடும் கோபத்தில் விஜய் டிவி? அப்படி என்ன நடந்தது?

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் 5 நண்பர்கள் பாவ்னி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை கூட யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.

    விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றிய அறிமுகம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தேவைபடாது. சன் டிவியில் குட் மார்னிங் ஷோ, சுட்டி டிவியில் குட்டீஸ் ஷோ என தனது பயணத்தை தொடங்கியவர் விஜய் டிவிக்கு சென்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டார். பின்பு தன்னுடைய திறமையால் விடா முயற்சியால் டாப் ஆங்கர்கள் லிஸ்டில் இடம் பிடித்தவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக உள்ளே நுழைந்து சிறப்பாக ஆடி ரன்னர் அப் ஆனார். பிரியங்காவுக்கு இவ்வளவு பேரும் புகழும், ரசிகர்களையும் சம்பாதித்து கொடுத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஆனால் திடீரென்று பிரியங்காவின் செயல் சூப்பர் சிங்கர் குழுவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, இனிமேல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதில் மைனா நந்தினியை ஆங்கராக தொடர, விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக பல தகவல்களை இணையத்தில் உலா வருகின்றன. என்ன காரணம் தெரியுமா?

    ”பாசக்கார பயலுங்கப்பா எங்க போனாலும் கூட்டிட்டு போயிடுவாங்க. பாருங்களேன் பிக் பாஸூக்கு கூட்டிட்டு போயிடாங்க” இப்படி தான் பிரியங்காவின் பிக் பாஸ் எண்ட்ரி கேலி கிண்டலாக மாறியது. அதற்கு காரணம் பிரியங்கா விஜய் டிவி மெட்டீரியல் என்பது தான். பிக் பாஸ் சீசன் 5 பலருக்கும் தெரியாத முகங்களே அதிகம் இருந்தன. தெரிந்த முகத்தில் முதல் 2 இடத்தில் இருந்தது ராஜூவும் பிரியங்காவும் மட்டும் தான். அதே போல் கடைசியில் முதல் இரண்டு இடத்தையும் இவர்கள் தான் பிடித்து இருந்தனர். பிக் பாஸில்  பிரியங்காவுக்கும் தாமரைக்கு இடையில் ஏற்பட்ட சண்டைகள் பல விமர்சனங்களை பெற்றனர். அதுவரை பிரியங்காவின் சிரிப்பு, மொக்க ஜோக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பிரியங்காவின் மற்றொரு முகமும் தெரிய வந்தது. இதனால் அவர் பல நெகடிவ் விமர்சனங்களையும் சந்தித்தார். அதே நேரம் அவருக்கு ஆதராகவாக ஒரு கூட்டம் இருந்தது. பிரியங்கா பிக் பாஸ் போன சமயம் பலரும் அவரின் ஆங்கரிங்கை சூப்பர் சிங்கரில் மிஸ் செய்தனர்.

    இதையும் படிங்க.. காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

    அதுவரை மைனா நந்தினி மா.கா.பாவுடன் சேர்ந்து கோ ஆங்கரிங் செய்து வந்தார். இருப்பினும் பிரியங்கா எப்போது வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த 1 வாரம் கழித்து மீண்டும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள், போட்டியாளர்கள், நடுவர்கள் கூட செம்ம ஹாப்பி. 2 வாரம் தொடர்ந்து பிரியங்கா தான் நிகழ்ச்சியை நடந்த்தி வந்தார். போன வராம் கூட கெட்டப் ரவுண்டில் பிரியங்கா, 96 த்ரிஷா கெட்டபில் வந்தார்.




    இந்நிலையில், சமீபத்தில் பிரியங்கா பிக் பாஸ் 5 நண்பர்கள் பாவ்னி, மது, அபிஷேக் உடன் ஐதராபாத் சென்று இருந்தார். இந்த வீடியோவை கூட யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். பிரியங்காவின் இந்த திடீர் பயணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் குழுவுக்கு அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது. அவர் ஐதராபாத் போன சமயம் மறுபடியும் மைனா நந்தினி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் இனிமேல் அவரை வைத்தே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்த விஜய் டிவி குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதே சமயம், அடுத்த வாரம் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் மட்டுமே இந்த வதந்திக்கு பதில் கிடைக்கும். ஒருவேளை அவர் வரவில்லை என்றால் இந்த தகவல் உண்மை என்று தான் மக்கள் எடுத்துக் கொள்வார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி