Home /News /entertainment /

அப்படியொரு வளர்ச்சி.. சூப்பர் சிங்கர் ’பூவையார்’ இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

அப்படியொரு வளர்ச்சி.. சூப்பர் சிங்கர் ’பூவையார்’ இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

சூப்பர் சிங்கர் பூவையார்

சூப்பர் சிங்கர் பூவையார்

பூவையார் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாகி விட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது. கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த கப்பீஸூக்கு விஜய் டிவியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்தும் நடித்தார். பின்பு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து  அடுத்த லெவலுக்கு சென்றார்.

    இதனை தொடர்ந்து பூவையார் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என  பிஸியாகி விட்டார். சிறு வயதில் பூவையார் பட்ட கஷ்டங்களை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் அறிவர். படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வரும் பூவையார் இப்போது தனியாக ஆல்பம் பாடல் பாடி அதில் நடித்தும் இருக்கிறார். கூடிய விரைவில் இந்த  ஆல்பம் ரிலீஸ் ஆகவுள்ளது .

    ஹேமா விஷயத்தில் பாரதிக்கு சவால் விடும் கண்ணம்மா. மறுபடியும் முதல்ல இருந்தா!

    இதுக் குறித்து தனது இன்ஸ்டாவில் பூவையார் வீடியோ வெளியிட்டுள்ளார். பலரும் பூவையாருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிரபல கானா பிரபலங்களான கானா சுதாகர், கனா மணி, கானா யோகேஷ் ஆகியோருடைய உதவியால் பல மேடைகளில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக பூவையார் கூறியுள்ளார். அதுமட்டுமில்லை இன்ஸ்டாவில் பூவையாரை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்.




    விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பூவையாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூவையார் என்னும் கப்பீஸ்
    தொடர்ந்து மென்மேலும் வளர ரசிகர்கள்  இன்ஸ்டாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Instagram, Vijay tv

    அடுத்த செய்தி