ஹோம் /நியூஸ் /entertainment /

புதிய கார்... நெகிழ்ச்சி பதிவு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் சிங்கர் பூவையார்!

புதிய கார்... நெகிழ்ச்சி பதிவு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் சிங்கர் பூவையார்!

காருடன் பூவையார்

காருடன் பூவையார்

ஆல்பம், சினிமா, கச்சேரி என கலக்கி வரும் பூவையார் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது. கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த கப்பீஸூக்கு விஜய் டிவியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்தும் நடித்தார். பின்பு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து  அடுத்த லெவலுக்கு சென்றார்.

  Also Read: காலா நாயகியுடன் டான்ஸ்! பாலிவுட்டில் எண்ட்ரி ஆன ஷிகர் தவான்! வைரல் போட்டோஸ்!

  இதனை தொடர்ந்து பூவையார் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என  பிஸியாகி விட்டார். சிறு வயதில் பூவையார் பட்ட கஷ்டங்களை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் அறிவர். படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வரும் பூவையார் இப்போது தனியாக ஆல்பம் பாடல் பாடி அதில் நடித்தும் இருக்கிறார்.


  ஆல்பம், சினிமா, கச்சேரி என கலக்கி வரும் பூவையார் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர், ''மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் thanks to all & thanks to God எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு'' எனக்குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் அடுத்த நிலைக்கு சென்றுள்ள பூவையாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


  விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பூவையாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூவையார் என்னும் கப்பீஸ் தொடர்ந்து மென்மேலும் வளர ரசிகர்கள்  இன்ஸ்டாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Murugadoss C
  First published: