• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த சின்ன வயசுல இப்படியொரு எனர்ஜியா? நித்யஸ்ரீ கிட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு!

இந்த சின்ன வயசுல இப்படியொரு எனர்ஜியா? நித்யஸ்ரீ கிட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு!

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

தனக்கு பிடித்த மியூசிக் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

  • Share this:
    21 வயதில் நித்யஸ்ரீ கிட்ட இருக்கும் எனர்ஜி கண்டிப்பாக பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் தான். இதுதான் அவரின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் என்று கூட சொல்லலாம்.

    விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றுமே டாப் தான். பல சீசன்களை கடந்து தொடர்ந்து விஜய் டிவியில் வெற்றியில் பயணித்துக்கொண்டிருக்கும் டாப் ரியாலிட்டி ஷோ. இதில் ஜூனியர் சீனியர் சீசன்களில் கலந்து கொண்ட பலரும் இப்போது ஸ்டார்ஸ் தான். சீனியர் சீசனில் கலந்துக் கொண்ட திவாகர், சந்தோஷ், பிரவீன், சத்ய பிரகாஷ் இப்போது கோலிவுட்டில் டாப் பாடகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல், ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா பற்றி கேட்கவே வேண்டாம்.

    ஜூனியர் சீசனில் கலந்து கொண்ட யாழினி, ஆஜித், அல்கா அஜித், அனு,பிரகதி, நித்யஸ்ரீ போன்ற பரீட்சையமான முகங்கள் இப்போது வளர்ந்துவிட்டனர். அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அண்மையில் அவரின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் 1 மில்லியனை கடந்தது. சூப்பர் சிங்கரில் முதலில் நித்யஸ்ரீ- யின் அக்கா தான் கலந்துக் கொண்டார். பின்பு ஜூனியர் சீசனில் அக்காவையே ஓவர்டெக் செய்து இறுதி சுற்று மேடை வரை ஏறினார் நித்யஸ்ரீ. அதன் பின்பு சிங்கப்பூர், மலேசியா வரை நித்யஸ்ரீ குரல் கொடி கட்டி பறந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்படியே தன்னை வளர்த்து கொண்டவர் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இயக்குனர் ரவிஅரசு படத்தில் ‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு தங்கையாக நடித்தார். அதன் பின்பு விதவிதமான டப்மேஷ்களை இணையத்தில் வெளியிட்டார். அவரின் குரலில் இருந்த மாயை ரசிகர்களை கட்டிபோட்டது. Get NithyaFied எனும் பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் ஃபேஷன், பாடல், டப்மேஷ் என கலக்கி வருகிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Nithyashree இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nithyashree)






    பல்வேறு மொழிகளின் பாடல்களை ஒன்றிணைத்து காரில் சென்றபடியே ஸ்டைலிஷாகப் பாடிக்கொண்டு நித்யஸ்ரீ வெளிட்ட வீடியோ 73 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது. இந்த சிறுவயதில் யாருடைய துணையும் உதவியும் இல்லாமல் தனக்கு பிடித்த மியூசிக் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: