Nithyashree: யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்ற சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ வீடியோ!

நித்யஸ்ரீ

தமிழின் ‘கதைப்போமா’ பாடலில் தொடங்கி மற்ற மொழி பாடல்களையும் இத்தொகுப்பில் அவர் பாடியுள்ளார்.

  • Share this:
    பாடகி நித்யஸ்ரீ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று 76 மில்லியன் பார்வைகளைப் பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் பலரும் தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இப்படியான சேனல்களின் எண்ணிக்கை லாக்டவுன் காலத்தில் தான் அதிகமானது. பெரும்பாலும் ஹோம் டூர், Vlog போன்ற வீடியோக்களை அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாடகி நித்யஸ்ரீயின் ஒரு வீடியோ 76 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.



    விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கரில் ஆரம்பமான நித்யஸ்ரீ, வட இந்தியா வரையிலான பல போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஏராளமான மொழிகளிலும் பிசிரில்லாமல் பாடுபவர். வெவ்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை ஒன்றாக இணைத்து பாடுவது இவரது ஸ்பெஷல்.

    இந்நிலையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற பல மொழி பாடல்களை ஒன்றாக இணைந்து, காரில் சென்றபடியே நித்யா பாடிச்செல்லும் வீடியோ, யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்கின்றன. தமிழின் ‘கதைப்போமா’ பாடலில் தொடங்கி மற்ற மொழி பாடல்களையும் இத்தொகுப்பில் அவர் பாடியுள்ளார். அதோடு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் அதில் இடம்பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: