முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சொன்னதை செய்த பிரபல இசையமைப்பாளர்.. சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு கொடுத்த வாய்ப்பு!

சொன்னதை செய்த பிரபல இசையமைப்பாளர்.. சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு கொடுத்த வாய்ப்பு!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா, சந்தோஷ், பூஜா என பலருக்கும் தனது இசையில் பாட வாய்ப்பு வழங்கி இருக்கிறார் இமான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சூப்பர் சிங்கர் பிரபலம் முத்துச்சிப்பிக்கு பிரபல இசையமைப்பாளர்  இமான் தனது இசையில் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இப்போது இந்த பாடல் இணையத்தில் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். பல பாடகர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய இந்த ரியாலிட்டி ஷோவின் சூப்பர் சிங்கர் சீனியர் 8 சீசன் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பானது. மொத்தம் 20 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதி போட்டியாளர்களாக அபிலாஷ், பரத், அனு, முத்து சிப்பி, ஸ்ரீதர் சேனா, மானசி ஆகியோர் தேர்வாகினர்.

குக் வித் கோமாளி செட்டில் ரித்திகா செய்த வேலை... பாதியில் போன அம்மு அபிராமி!

மேடை பாடகரான முத்துச்சிப்பி இந்த ஷோவின் மூலம் அனைவரும் அறியப்படும் முகமாக மாறினார். இந்த போட்டியில் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நடுவர்களால் பெரிதளவில் கொண்டாட்டப்பட்டது.  அதிலும் குறிப்பாக கர்ணன் படத்தில் இடம்பெற்ற “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல் முத்து சிப்பியின் திறமையை உலகறிய செய்தது. இந்த நிகழ்ச்சியில் இடை இடையில் பல பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து இருக்கிறார்கள். அப்படி வந்தவர்களும் முத்து சிப்பியின் திறமையை மனதார பாராட்டி சென்றுள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளர் இமான், பாராட்டுடன் நிறுத்தி விடாமல் முத்துச்சிப்பிக்கு தனது இசையில் பாட வாய்ப்பும் வழங்கியுள்ளார்.

முத்துச்சிப்பி முதல் ஆள் இல்லை இதற்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா, சந்தோஷ், பூஜா என பலருக்கும் தனது இசையில் பாட வாய்ப்பு வழங்கி இருக்கிறார் இமான். இந்நிலையில் இமான் இசையமைக்கும், சசிகுமார் நடித்திருக்கும் ‘காரி’ படத்தில் முத்துச்சிப்பி  பாடல் ஒன்றை பாட்டி இருகிறார்.

இந்த தகவலை இமான், தனது ட்விட்டரில் பதிவு  செய்து அதை உறுதிப்படுத்தியுள்ளார்.  முத்துச்சிப்பி பாடி இருக்கும் ’எங்கும் ஒளி பறக்குமே’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Sasikumar, D.imman, Vijay tv