சூப்பர் சிங்கர் மாளவிகா ராஜேஷ் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஷோவின் தற்போதைய சீசன் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. கடந்த வாரத்தில், வைல்ட் கார்ட் சுற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிகள் ஒரு சில வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் யார் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்வார்கள் என்று தெரிந்துக் கொள்ள அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிகழ்ச்சியின் 6-ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர்
மாளவிகா ராஜேஷ். பிரபல இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் மகளான இவர், சூப்பர் சிங்கர் 6-ம் சீசனின் 2-வது ரன்னராக அறிவிக்கப்பட்டார். அதோடு பிக் பாஸ் மோகன் வைத்யாவின் தம்பி மகள் தான் மாளவிகா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் மாளவிகா தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்து, அதன் படங்களை
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது குழந்தைப்பருவ நண்பரும், இசைக்கலைஞருமான சாய் ஹரியை தான் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். இதையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும்
மாளவிகா - சாய் ஹரி ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெடிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.