• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 33 வயதில் திருமணம்... மாப்பிளை வயசு கம்மி.. சூப்பர் சிங்கர் மாளவிகாவை துரத்தும் சர்ச்சைகளுக்கு என்ன காரணம்?

33 வயதில் திருமணம்... மாப்பிளை வயசு கம்மி.. சூப்பர் சிங்கர் மாளவிகாவை துரத்தும் சர்ச்சைகளுக்கு என்ன காரணம்?

சூப்பர் சிங்கர் மாளவிகா

சூப்பர் சிங்கர் மாளவிகா

தமிழில் மட்டுமில்லை இந்தியிலும் மாளவிகா குரல் ஒலித்து இருக்கிறது.

  • Share this:
    கடந்த சில நாட்களாக இணையதளம் முழுவதும் சூப்பர் சிங்கர் மாளவிகாவின் திருமணம் குறித்த தகவல்கள் மிகப் பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. அதற்கு என்ன காரணம் என பார்ப்போம்.

    விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இருக்கும் பேரும் புகழும் பிரமிக்க வைக்கக்கூடிய ஒன்று. இதில் ஆங்கராக இருந்த பிரியங்கா தான் இப்போது பிக் பாஸில் கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மிகப் பெரிய புகழ் உச்சியில் உள்ளனர். பலரும் வெள்ளித்திரையில் சிறந்த பாடகர்கள் லிஸ்டிலும் இடம் பிடித்து விட்டனர். அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியால் புகழை பெற்றவர்கள் அதிகம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகம் அறியும் பாடகி ஆனார் மாளவிகா சுந்தர்.

    இவர் பல நாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மாளவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாடிய பாடலின் வீடியோவையும், அவரின் சில போட்டோக்களையும் அவ்வப்போது பதிவு செய்வார்.வெள்ளித்திரையில் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் படத்தில் பாடகி மாளவிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு சூப்பர் சிங்கரில் பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே தமிழக ரசிகர்களின் பேராதரவு இருந்தது. தமிழில் மட்டுமில்லை இந்தியிலும் மாளவிகா குரல் ஒலித்து இருக்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Maalavika Sundar (@sundarmaalavika)






    இந்தியன் டால் என்ற நிகழ்ச்சியிலும் தனது இசை திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பாராட்டுக்களை பெற்று இருக்கிறார். இப்படி பல வெற்றிகளுக்கு சொந்தக்காரியான மாளவிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இப்போது அவருக்கு 33 வயது. ஆனால் அவர் கல்யாணம் செய்யவுள்ள நபருக்கு வயது 32. இதை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து இருந்தார். சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியையும் மாளவிகா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவர் குறித்த பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகரித்துள்ளது. வருங்கால கணவருடன் அவர் லிப் டூ லிப் கொடுத்த புகைப்படமும் இந்த சர்ச்சைக்கு ஒரு காரணம் தான் .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: