• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’அன்புக்கு வயது தடையில்லை’ - இளையவரை திருமணம் செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்!

’அன்புக்கு வயது தடையில்லை’ - இளையவரை திருமணம் செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்!

மாளவிகா சுந்தர்

மாளவிகா சுந்தர்

சூப்பர் சிங்கரில் பங்கேற்றதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் மாளவிகா சுந்தர்

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் எண்ணற்ற சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முக்கிய நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் திறமை மூலம் மக்களின் மனங்களை கவர்ந்து பல்வேறு சுற்றுகளை கடந்து பெயரும், புகழும் பெற்று வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் சூப்பர் சிங்கரின் 8-ஆம் சீசன் பரபரப்பாக நடந்து முடிந்தது.

    இதில் பலரால் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதர் சேனா டைட்டில் வின்னர் ஆனார். இதன் மூலம் பிரபல இசைமைப்பாளர் அனிருத் இசையில் அவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது. இப்படி இதில் பங்கேற்ற வின்னர்கள் மட்டுமின்றி இர்டாண்டம் மற்றும் மூன்றாமிடம் பிடித்தவர்கள், நன்றாக பாடி தங்கள் திறமை மூலம் மக்களை கவர்ந்தவர்கள் என பலர் சினிமாத்துறையில் பின்னணி பாடகர்களாக கலக்கி கொண்டிருக்கின்றனர்.

    இதனிடையே சூப்பர் சிங்கரில் பங்கேற்றதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் மாளவிகா சுந்தர். சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் பங்கேற்று பிரபலமடைந்த மாளவிகா சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் டங் டங் என்ற பாடலை பாடியதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் சமீபத்தில் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியை அறிவித்தார்.

    மேலும் வருங்கால கணவருடன் தான் எடுத்து கொண்ட ஒரு சில போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார். இதனை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் மாளவிகா சுந்தருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனிடையே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா சுந்தர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் உரையாடினார்.

    அப்போது ஒரு ரசிகர் மாளவிகாவிற்கும், அவரது வருங்கால கணவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது ஆம் எனக்கும் என் வருங்கால கணவருக்கும் இடையே 1 வயது வித்தியாசம் இருக்கிறது. அவர் என்னை விட 1 வயது குறைவானவர் அவருக்கு 32 வயதாகிறது. இதனை தொடர்ந்து உங்கள் இருவருக்கும் இருக்கும் வயதி வித்தியாசம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதில் அளித்து பேசிய மாளவிகா திருமணத்திற்கு வயது ஒரு தடையில்லை என்று நான் நினைக்கிறேன். பெண்ணை விட பையனுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையாக தோன்றவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மரியாதையாக வாழ்வதே முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: