Home /News /entertainment /

குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

குக் வித் கோமாளி பரத்

குக் வித் கோமாளி பரத்

ஆரம்பத்தில் சிவாங்கியும் இப்படித்தான் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார் பின்பு அவர் தான் இப்போது சின்னத்திரை ஜெனிலியா

  குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஏற்கெனவே செஃப் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பதை விமர்சித்து இருந்த ரசிகர்கள், இப்போது புது கோமாளியாக நுழைந்திருக்கும் பரத்தை பற்றியும் ஏகப்பட்ட கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதுக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் இதுவரை ஒளிப்பரப்பாகி இருக்கின்றன. ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற ஒருசில நிகழ்ச்சிகள் இப்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. அந்த லிஸ்டில் இணைந்த மற்றொரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. விளையாட்டாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி ஒரு கட்டத்தில் பிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கை தூக்கி சாப்பிட்டது. நிகழ்ச்சியை ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் விரும்பி பார்க்க தொடங்கினர்.

  முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றி கண்டது. நிகழ்ச்சி முடிந்த உடன் ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் சீசன் 3ஐ சீக்கிரமாக தொடங்கினால் நல்லா இருக்கும் என்று அன்பு கோரிக்கைகளை விட தொடங்கினர். அந்த அளவுக்கு ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதிலும் குறிப்பாக கோமாளிகள் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலைக்கு தனியாக ஃபேன்ஸ் பேட்ஜ்கள் உருவாக்கப்பட்டனர்.

  இதையும் படிங்க.. செம்பருத்தி சீரியல் வில்லிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

  இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீசன் 3 கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்த சீசன் 3 தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஏற்கெனவே செஃப் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிப்பதை விமர்சித்து இருந்த ரசிகர்கள், இப்போது புது கோமாளியாக நுழைந்திருக்கும் பரத் பற்றி நெகட்டிவ் மற்றும் பாசிடிவ் கமெண்டுகள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

  இந்த முறை புகழுக்கு பதிலாக புதிய கோமாளிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதில் குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர் உள்ளனர். இதில் பரத் மற்ற கோமாளிகள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அவர் காமெடி செய்யவில்லை அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களை வைத்து தான் மற்றவர்கள் அவரை காமெடி செய்கின்றனர். சூப்பர் சிங்கரிலும் இது தான் நடந்தது. பரத்தை வைத்து மா.கா.பாவும் பிரியங்காவும் டைமிங் காமெடி செய்து கொண்டிருப்பார்கள். இது சூப்பர் சிங்கரில் வொர்க்கவுட் ஆச்சி, ஆனால் குக் வித் கோமாளியில் எடுபடவில்லை என்கின்றனர் ஒருசில ரசிகர்கள். அவர்கள் பரத்துக்கு பதில் வேறு கோமாளிகள் மதுரை முத்து, சரத், தங்கத்துரை போன்றவர்களை சேர்த்து இருக்கலாம் என கருத்து கூறியுள்ளனர்.  அதே நேரம், பரத்துக்கு ஆதரவாக சில கருத்துக்களை பார்க்க முடிகிறது. அதாவது, பரத்தின் இந்த வகையான காமெடி யாரும் ட்ரை செய்யாதது என்றும் முதல் எபிசோடு தானே முடிந்து இருக்கும் போக போக எல்லோருக்கும் பரத்தை பிடிக்கும் என்கின்றனர்.

  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆரம்பத்தில் சிவாங்கியும் இப்படித்தான் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார் பின்பு அவர் தான் இப்போது சின்னத்திரை ஜெனிலியா. எனவே, பரத் பற்றிய பிம்பமும் மாற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி