விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆங்கர் பிரியங்கா, சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்று ஹிட் அடித்துள்ளது. அதுமட்டுமில்லை இதன்மூலம் பிரியங்கா வெயிட் லாஸ் செய்து இருக்கும் ரகசியமும் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்திருக்கும் பிரியங்கா, பிக் பாஸூக்கு பின்பு உலகமெங்கும் அறியப்படும் முகமாக மாறிவிட்டார். இலங்கை, கனடா, போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் பிரியங்காவின் இன்ஸ்டாகிராமில் “உங்கள் ஆங்கரிங் சூப்பர் பிரியூ” என பதிவிடும் கருத்துக்களை பார்க்கையில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. விஜய் டிவி டிடிக்கு பிறகு ஆகச் சிறந்த பெண் தொகுப்பாளராக மாறிவிட்டார் பிரியங்கா. சமீபத்தில் கூட விஜய் டிவி சார்பில் நடத்தப்பட்ட டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு சிறந்த பெண் தொகுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல... பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!
பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு பிரியங்கா மீது சில நெகட்டிவ் விமர்சனங்கள் உருவாகி இருக்கிறது. குறிப்பாக தாமரை செல்வி விஷயத்தில் பிரியங்கா நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய ஆங்கரிங் பயணத்தை செய்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் அல்டிமேட்டில் பிரியங்கா பாவ்னியுடன் என்ட்ரி கொடுத்தார். என ட்ரி ஆன உடனே பிக் பாஸை பெருசு என கலாய்த்து வீட்டைஅதகளம் செய்தார். பிரியங்கா வந்த எபிசோடும் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார்.
குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?
பீட்ச் கலரில் கோட் ஷூட்டில் வெள்ளை நிற தீமில் நடத்தப்பட்டுள்ள இந்த ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லை, இந்த புகைப்படத்தில் பிரியங்கா வெயிட் லாஸ் செய்து இருப்பதும் பயங்கரமாக தெரிகிறது. இதன் ரகசியத்தை ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளாக எழுப்பி வருகின்றனர். ஜப்பி கேர்ள் என அழைக்கப்படும் பிரியங்கா, உடல் எடை குறைத்து மிடுக்கான தோற்றத்தில் காட்சியளிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.