ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன சூப்பர் சிங்கர் பிரபலம்! யாருன்னு தெரியுதா?

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன சூப்பர் சிங்கர் பிரபலம்! யாருன்னு தெரியுதா?

அல்கா அஜித்

அல்கா அஜித்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இன்று வளர்ந்து விட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சின்னத்திரையின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்கா அஜித்தை ஞாபகம் இருக்கிறதா? குழந்தையாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இன்று வளர்ந்து விட்டார். அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் அல்கா அஜித். கேரளாவை சேர்ந்த இவர், தனது இனிமையான குரலால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார். இசை குடும்ப வாரிசான அல்கா, முறைப்படி சங்கீதம் பயின்றவர். தனது தந்தையின் விருப்பப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சிறப்பு விருந்தினராக வந்த சித்ரா, ஜானகி அம்மா, சுசிலா என அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார் அல்கா.

  ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

  தன்னுடைய இரண்டரை வயதிலே மேடையில் பாட தொடங்கிய அல்கா இந்தி பாடலை பாடி பலரையும் வியப்படைய செய்தார்.

  2010 ஆம் ஆண்டில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார். இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் அல்கா பல பாடல்களை பாடியுள்ளார். நடுவில் அல்காவை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை. கர்நாடக இசை கச்சேரி, ஆல்பம் என்று பிஸியானார்.

  இந்நிலையில் சமீபத்தில் அல்கா அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியரில் குழந்தையாக இருந்தா அல்கா இப்போது நன்கு வளர்ந்து விட்டார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் அல்கா அஜித்தா இது?  என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். அதுமட்டுமில்லை தன்னுடைய இசை கச்சேரி வீடியோக்களையும் அல்கா ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகிறர். அவரின் குரல் இனிமை இன்னும் அவரை விட்டு போகவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Television, Vijay tv