சூப்பர் சிங்கர் பிரபலம் ஆஜித் காலிக் புதியதாக கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
சூப்பர் சிங்கர் எனும் புதிய பாடகர்களுக்கான தேடுதல் வேட்டையை வெற்றிகரமாக நடத்தி வருகிறது விஜய் டிவி. ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக பிரித்து போட்டியாளரின் திறமையை வெளியே கொண்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் இப்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்ட ஆஜித்தை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். தனது திறமையால் ஏ.ஆர் ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார் ஆஜித்.
பண்ண தப்புக்கு கிடைத்த தண்டனை.. பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
அதன் பின்பு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி ஆஜித்துக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து மியூசிக், சிங்கிங், ஆல்பம் ஆகியவற்றில் ஆஜித் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நெருங்கிய தோழி கேப்ரில்லா என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் சேர்ந்து பல ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்,. இருவரும் பிக் பாஸில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!
இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஆஜித் சமீபத்தில் புதியதாக கார் வாங்கிய புகைப்படத்தை சந்தோஷத்துடன் ஷேர் செய்து இருந்தார். இது இவரின் முதல் புதிய கார் ஆகும். skoda slavia என்ற காரை ஆஜித் வாங்கியுள்ளார். இதன் விலை 18 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை என கூறப்படுகிறது. ஆஜித்தின் புகைப்படத்துக்கு லைக்ஸ் மற்றும் கார் வாங்கியதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்குவது வரிசையாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஷிவானி, மைனா நந்தினி, புகழ், நாஞ்சில் விஜயன், மணிமேகலை, ஹேமா ராஜ்குமார் என இவர்கள் வரிசையில் இப்போது ஆஜித்தும் இணைந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.