Home /News /entertainment /

சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் அப்படி என்ன நடந்தது? வருத்தத்தில் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு!

சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் அப்படி என்ன நடந்தது? வருத்தத்தில் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

”கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள்”

  சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக அரங்கேறியது. இந்த சீசனின் வெற்றியாளராக கிரிஷாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லை யுவன் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 முதன் ரன்னர் அப் ரிஹானா இறுதி போட்டியில் பாடிய பாடல் குறித்து வருத்தத்துடன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் தனதுஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சின்னத்திரையில் மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சிகாக பயணித்துக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் சீசன் 8 ஃபைனல்ஸில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா ஆகிய 5 பேரும் போட்டி போட்டனர். மக்களின் ஓட்டு எண்ணிக்கை மற்றும் நடுவர்களின் மார்க்ஸ் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெற்றியாளர் மகுடத்தை கிரிஷாங் தட்டி சென்றார். 2-வது இடம் ரிஹானாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் ரிஹானா தான் வெற்றியாளர், வழக்கம் போல் விஜய் டிவி தகுதியான போட்டியாளரை வெற்றியாளராக அறிவிக்கவில்லை என சர்ச்சை இணையத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறது.

  பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவுக்காக மீனா எடுக்க போகும் அதிரடி முடிவு!

  இப்படி இருக்கையில், ஜேம்ஸ் வசந்தன் இந்த போட்டியில் நடைப்பெற்ற மற்றொரு விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.
  இறுதிப்போட்டியில் வேலைக்காரன் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற கருத்தவெல்லாம் கலீஜாம் என்ற பாடலை ரிஹானா பாடியிருந்தார். இந்த பாடலில் இடம்பெற்ற கெட்டவார்த்தையை எப்படி குழந்தை பாட அனுமதிக்கலாம் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!

  இதுக் குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ .ஒரு 8-வயது (இருக்கலாம்) பெண் குழந்தை ‘கருத்தவன்ல்லாம் கலீஜாம்’ பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது. பாடலின் இடையில் வருகிற ‘தக்காளி’ என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள்.எனக்கு ‘திக்’கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.  இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரின் சமூகப் பங்களிப்பு இது. இது ஒரு புறம்!ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!

  super singer 8 winner supersinger junior 8 finals Rihana performance song james vasanthan fb post ssj
  ரிஹானா


  கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறியுள்ளார். ஜேம்ஸ் வசந்தின் இந்த கருத்தை பலரும் ஆதரித்து  தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி